பற்று அவா இரண்டும் ஒன்றா?
பற்று அவா இரண்டும் ஒன்றா ? இந்தக் கேள்விக்கான பதிலை தமிழ் துணைக் கொண்டு அறியலாம் . நான் , எனது என்பது அகங்காரம் . இது மமகாராம் என்னும் அகப்பற்று . என்னுடையது , என் பொருள் என்பது புறப்பற்று . எனக்கு இந்தப் பொருள் வேண்டும் , அந்தப் பொருள் வேண்டும் என்று இல்லாத பொருள் மேல் கொள்வது அவா . இதை கவிச்சக்கரவர்த்தி கம்பன் , பற்று அவா வேர் ஒடு உம் பசை அறப் பிறவி போய் முற்ற வால் உணர்வு மேல் முடுகினார் அறிவு சென்று உற்ற வானவன் இருந்து யோகு செய்தனன் எனில் சொற்ற ஆம் அளவதோ மற்று இதன் தூய்மையே . இந்த இடத்தின் தூய்மையை என்னால் சொல்லவும் முடியுமோ ? மனிதனுடைய ஆசைகளையும் , பந்தங்களையும் , வேரோடு அழித்து , பிறப்பு இறப்பு சுழற்சியில் இருந்து நம்மை விடுவிக்கும் மெஞ்ஞான மெஞ்ஞான பெற்ற பெரியவர்கள் சென்று அடையும் பரம் பொருளான சிவா பெருமான் தவம் செய்யும் இடம் இது என்றால் , ...