இடுகைகள்

ஜூன், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Count your blessings!

  அப்பாவும் தாத்தாவும் ஆண்டுக்கு ஒருமுறை சென்னைக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். திடீரென்று ஒருநாள் தாத்தா எங்கோ கிளம்பிக் கொண்டிருந்தார்.முக்கியமான ஒரு இடத்துக்கு போக வேண்டும்னு சொன்னார். நான் சிரித்துக் கொண்டே போயிட்டு வா தாத்தா என்றேன். நிற்க. ஒரு முறை என் பெண்ணின் பள்ளி சார்பில் சென்னை, மைலாப்பூர் சித்திரக் குளத்தில் உழவாரப் பணியில் ஈடுபட்டிருந்தனர். பள்ளி மாணவியான என் பெண்ணும் பங்கெடுத்துக் கொண்டாள். அன்று என் மகளுக்கு ஒரு ஓவியப் போட்டியி அதைத் தொடர்ந்து நடனப் பயிற்சசி என்று பிஸியான schedule. அதனால் அவளை சற்று முன்னதாக வீட்டுக்கு அழைத்துச் செல்ல ஆசிரியையிடம் அனுமதிப் பெறவேண்டும். பள்ளியில் யாருக்கும் என்னைத் தெரியாது. நான் அடிக்கடி பள்ளிக்கு செல்லும் ரகம் இல்லை. பள்ளியில் எனக்கு தெரிந்தவர்கள் பள்ளியின் செக்குரிட்டியும் ஸ்போர்ட்ஸ் வாத்தியார் மட்டுமே. அன்று ஆசிரியை சந்திக்கச் சென்ற என்னைப் பார்த்து நீங்க யாரு என்றார். மிகுந்த சிரமப் பட்டு தட்டித் தடுமாறி என்னை அறிமுகம் செய்துக் கொண்டிருந்தேன். டக் கென்று மின்னல் போல் பிரகாசித்தது அவர் முகம். ஓ நீங்களா? உங்க தாத்தா தான...
படம்
  தமிழில் எழுதப்பட்ட முதல் சிறுகதை எது ?   தமிழ் குருகுலம் கேள்விப்பட்டு இருக்கின்றீர்களா ?   கம்ப நிலையம் பதிப்பகத்தார்   தெரியுமா ?   தமிழில் எழுதப்பட்ட முதல் சிறுகதை 1917 இல் வெளிவந்த குளத்தங்கரை அரசமரம் .  இதை எழுதியவர் வ வே சு ஐயர் . இவர்   தமிழ் சிறுகதை தந்தை என்று அழைக்கப்படுகிறார் .   வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் , தன்னுடைய பன்னிரெண்டாம் வயதில் மெட்ரிக் தேர்வில் மாகாணத்தில் ஐந்தாவது இடத்தில் தேர்ச்சி பெற்றார் . பதினாறாம் BA தேர்வில் மாகாணத்தில் முதல் மாணவனாக தேர்ச்சிப் பெற்றார் . திருச்சியிலிருந்து சென்னை வந்து சட்டம் படித்து அதிலும் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றார் . அவருடைய 19 ஆவது வயது முதல் Pleader ஆக   வக்கீல் தொழில் புரிந்து வந்தார் .   1907 இல்   பாரிஸ்டர் கல்வி பயில ரங்கூன் சென்றார் . ஓராண்டில் , சட்டப்படிப்போடு   மேற்கத்திய இசை மற்றும் நடனம் பயிலும் ஆசையில் , மிடுக்கான இளைஞனாக லண்டன் வந்து சேர்ந்தார் . அங்கு India Hou...