Veppam Poo
நோயிலே படுப்பதென்னே கண்ண பெருமானே நீ நோன்பிலே உயிர்ப்பதென்னே கண்ண பெருமானே எங்கள் குடியிருப்பில் ஆறே வீடுகள். நாங்கள் மூன்று இல்லத்தரசிகள் சம வயதுடையவர்கள். வேலைக்கு செல்பவர்கள். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளில் முதன்முறையாக வீட்டில் இருக்கிறோம். தினமும் புது recipe கண்டறிவதும் செய்வதும் எங்கள் தலையாய கடமை. வருஷ பிறப்பு வேப்பம்பூவுக்கு என்ன செய்ய என்று லலிதா கேட்டார். என்னக்கு அம்மா என்ற அக்ஷய பாத்திரம் இருப்பதில் ஒரு இறுமாப்பு. அம்மா ஒவ்வொரு கோடையிலும் வேப்பம் மரத்தடியில் துண்டு விரித்து பூவை சேகரித்து நிழலில் காய வைத்து வைப்பதனால் நான் இது பற்றி கவலைப் படவில்லை. ஆனால் எங்கள் பேச்சு வேப்பம் பூ, சேகரிப்பவர், சேகரிக்கும் முறை என்று எங்கெங்கோ சென்றது. ஏதோ பேசி எங்கள் குழந்தைப் பருவம் வாழ்ந்த வீடு என்று பேச்சு போயிற்று. India Cements quarters நாங்கள் வசித்த வீடு ஒரு சோலை. வீட்டை சுற்றி தென்னை, கொய்யா, எலுமிச்சை, மா, புளி, நாவல், வாழை மற்றும் முன் முற்றத்...