Veppam Poo
நோயிலே படுப்பதென்னே கண்ண பெருமானே நீ
நோன்பிலே உயிர்ப்பதென்னே கண்ண பெருமானே
தினமும் புது recipe கண்டறிவதும் செய்வதும் எங்கள் தலையாய கடமை.
வருஷ பிறப்பு வேப்பம்பூவுக்கு என்ன செய்ய என்று லலிதா கேட்டார். என்னக்கு அம்மா என்ற அக்ஷய பாத்திரம் இருப்பதில் ஒரு இறுமாப்பு. அம்மா ஒவ்வொரு கோடையிலும் வேப்பம் மரத்தடியில் துண்டு விரித்து பூவை சேகரித்து நிழலில் காய வைத்து வைப்பதனால் நான் இது பற்றி கவலைப் படவில்லை.
ஆனால் எங்கள் பேச்சு வேப்பம் பூ, சேகரிப்பவர், சேகரிக்கும் முறை என்று எங்கெங்கோ சென்றது. ஏதோ பேசி எங்கள் குழந்தைப் பருவம் வாழ்ந்த வீடு என்று பேச்சு போயிற்று.
India Cements quarters நாங்கள் வசித்த வீடு ஒரு சோலை. வீட்டை சுற்றி தென்னை, கொய்யா, எலுமிச்சை, மா, புளி, நாவல், வாழை மற்றும் முன் முற்றத்தில் மல்லி, செம்பருத்தி, முல்லை, ரோஜா மற்றும் இதர பூக்கள் பூத்துக் குலுங்கும்.
இந்த வீட்டின் விசேஷம் என்னவென்றால் இது இயற்கையோடு இசைந்த வீடு. மயில், முயல், பாம்பு, கீறி என்று சஞ்சறிக்கும். எனக்கு 4 வயது இருக்கும் பொது எனது சகோதரன் பாம்பும் கீறியும் சண்டை இடுவதை பார்க்க அழைத்து செல்வான்.
வீட்டின் வெளியில் ஒரு 6 வேப்பம் மரம். இந்த வேப்பம் இலையை அம்மா கூட்டி தீ வைக்கும் போது அது தான் வானத்துக்கு பாலம் காட்டும் ஏணி என்று நினைத்திருக்கிறேன். அந்த வெண் புகை வாசனை இன்றும் என் மனதில் நிற்கிறது.
இந்த குடியிருப்புக்குள் அன்னியர்க்கு அனுமதி இல்லை. ஆனால் quarryil வேலை செய்யும் தினக்கூலி இங்கு வருவர். இவர்கள் வீட்டு வேலை, தோட்டவேலை இன்ன பிற வேலை நிமித்தமாக உள்ளே வருவார்.
பிள்ளை பிராயத்தில் என்னை எப்பொழுதும் தோட்டத்தில் செடி கொடிகளின் நடுவில் தான் பார்க்க முடியும். வேனல் காலத்தில் வரும் இவர்கள் வேப்பம் பூ சேகரிப்பார்கள். பின்னர் வேப்பம் கொட்டை சேகரிப்பார்கள். அம்மாவிடம் படி வாங்கி அளந்து மூட்டைக் கட்டி கொள்வார்கள்.
இவர்கள் சிற்சமயம் கீழிருந்து ஏதோ ஒன்றை எடுத்து சாப்பிடுவார்கள். எனக்கும் சாப்பிட கொடுப்பார்கள். அது நன்கு கனிந்த வேப்பம் பழம். மிகவும் சுவையாக இருக்கும். சதை பற்றோடு இனிப்பும் துவர்ப்பும் கலந்து இருக்கும். எனக்கு அதன் மேல் அலாதி விருப்பம் ஏற்பட்டது
.
நிற்க
மஹாகவி பாரதிக்கு சாப்பாட்டில் நல்ல ரசனை உண்டு. எப்போதும் ரசித்து உண்ணும் பழக்கம் கொண்டவர். ஒரு முறை அவர் கடையத்தில் இருந்த பொது வீட்டின் பின்வெளி பக்கம் சில ஏழை குழந்தைகள் எதையோ எடுத்து உண்பதைக் கண்டார். அவர் அருகில் சென்று கேட்டபோது அவர்கள் வேப்பம் பழம் சாப்பிடுவதாக கூற பாரதியும் அதை வாங்கி சுவைத்து மகிழ்ந்தார். அன்று முதல் உணவில் சுவை விரும்புவதை கைவிட்டார்.
காயிலே புளிப்பதென்னே கண்ண பெருமானே நீ
கனியிலே இனிப்பதென்னே கண்ண பெருமானே
போற்றினோரை காப்பதென்னே கண்ண பெருமானே நீ
பொய்யர் தம்மை மாய்ப்பதென்னே கண்ண பெருமானே
கருத்துகள்
கருத்துரையிடுக