பாசுரப்படி ராமாயணம் Part - 23
பாசுரப்படி ராமாயணம்
Part - 23
சுந்தர காண்டம்
இலங்கையின் காவலைக் கடந்து, வைதேஹியைத் தேடி இறுதியில் அவளை அசோகவனத்தில் கண்டான் அனுமன்.
துயரத்தின் விளிம்பில்ஸ் இருந்த அன்னையோடு பேசினான்.
அவள் நம்பிக்கையைப் பெற ராம காதையைக் கூறினான்.
வாராரும் முலைமடவாள் வைதேகி தனைக்கண்டு'நின் அடியேன் விண்ணப்பம் கேட்டருளாய்! அயோத்தி தன்னில் ஓர்,இடவகையில் எல்லிஅம்போதுஇனிதுஇருக்க மல்லிகைமாமாலை கொண்டு அங்கு ஆர்த்ததுவும்; கலக்கியமாமனத்தினளாய் கைகேயி வரம் வேண்ட மலக்கியமாமனத்தினனாய்மன்னவனும் மறாதொழியக்'குலக்குமரா! காடு உறையப்போ என்று விடைகொடுப்பஇலக்குமணன் தன்னோடு அங்கு ஏகியதும்கங்கை தன்னில்கூர் அணிந்த வேல்வலவன்குகனோடு சீர் அணிந்த தோழமை கொண்டதுவும்; சித்திரகூடத்து இருப்பப் பரதநம்பி பணிந்ததுவும்; சிறுகாக்கை முலை தீண்ட அனைத்துலகம் திரிந்து ஓடி 'வித்தகனே !ராமவோ ! நின்அபயம் ! ' என்ன அத்திரமேஅதன்கண்ணைஅறுத்ததுவும்; பொன்ஒத்த மான்ஒன்று புகுந்து இனிது விளையாட நின் அன்பின்வழிநின்று சிலைபிடித்து எம்பிரான் ஏகப் பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததுவும் 'அயோத்தியர் கோன்உரைத்த அடையாளம்; 'ஈது அவன்கைமோதிரமே'என்று அடையாளம் தெரிந்து உரைக்க,
பெரியாழ்வார் திருமொழியிலிருந்து இந்தப் பகுதி கையாளப் பட்டுள்ளது.
வைதேகியின் சந்தேகத்தை களைவதற்காக ராமன் சொன்ன அடையாளங்களை சொல்கிறான்.
கைகேயி கேட்ட வரத்தால் கலங்கிய மனத்தோடு தசரதன் விடை கொடுக்க, இல்லதம்பியோடு கானம் வந்ததையும்;
கங்கைக் கரையில் குகனோடு நட்புப்பூண்டத்தையும்;
சித்த்ரக் கூடத்தில் இருக்கும் போது பரதன் வந்தைதையும்;
காகம் ஒன்று சீதையின் முலை தீண்ட தை துரத்திய அம்பினால் காகம் வந்து ராமனிடம் சரண் அடைத்ததையும்; அப்போதே அதன் ஒற்றைக் கண்ணை எடுத்ததையும்;
பொன் மானைத் பிடிக்க ராமன் போகவும், அவனைத் தொடர்ந்து இலக்குமணன் போனதுவும் ;
இவை எல்லாம் அயோத்தியர் கோன் சொன்ன அடையாளங்கள்.
இது அவன் கை மோதிரம்.
கம்பன்,
‘மீட்டும் உரை வேண்டுவன இல்லை ‘என மெய் பேர்தீட்டியது தீட்டு அரிய செய்கையது செவ்வே :‘நீட்டு இது! ‘என நேர்ந்தனன் எனா நெடிய கையால்காட்டினன் ஒர் ஆழி; அது வாள் நுதலி கண்டாள்
உடையதுமான, திருமுகம் என்று இராமபிரான் என்னிடம் வழங்கினான்;
நீண்ட கைகளில் மோதிரத்தை
காண்பித்தான்;, அந்த மோதிரத்தை பிராட்டி; கண்டாள்.
#பாசுரப்படிராமாயணம் #pasurappadi #Ramayanam #பாசுரப்படி_ராமாயணம்
கருத்துகள்
கருத்துரையிடுக