பாசுரப்படி ராமாயணம் Part - 27

பாசுரப்படி ராமாயணம்

Part - 27

யுத்த காண்டம்

சரண்புக குரைகடலை அடலம்பால் மறுக எய்து,
கொல்லை விலங்கு பணிசெய்ய
மலையதனால் அணை கட்டி மறுகரையை ஏறி

விபீஷணன் வந்து சரணடைந்த பின் கடலைக் கடந்து செல்ல உபாயம் என்ன என்று சிந்தைகளானார்கள்.

ராமன் வீடனனை நோக்கி,

கிடக்கும் வண்ண வெங் கடலினைக்
கிளர் பெருஞ் சேனை
கடக்கும் வண்ணமும் எண்ணுதி
எண்ணு நூல் கற்றாய்! ‘

நல்ல நூல்களை கற்றவனே, விபீஷணா, நம் எதிரே கிடக்கும் நீல வண்ணம் உடைய கொடிய கடலை, கிளர்ந்து எழுந்து நிற்கும் நம் சேனை கடந்து செல்லும் வழியைச் சிந்திப்பாயாக என்றான்.

குரைகடலை அடலம்பால் மறுக எய்து - ஆற்பரிக்கின்ற கடலை கலங்கும்படி அம்பு எய்து,

கொல்லை விலங்கு பணிசெய்ய - கொல்லை என்றால் முட்செடிகள், மரங்கள்,பராமரிக்கப்படாத காடு; காட்டி விலங்குகள் பனி செய்ய

மலையை பெயர்த்து வந்து அதன் பாறைகளையும் மரங்களையும் போட்டு கடலை நிறத்து அணைகட்டி மறு கரையை வந்தடைந்தனர்.

பேர்த்தன மலை சில; பேர்க்கப் பேர்க்க, நின்று
ஈர்த்தன சில; சில சென்னி ஏந்தின;
தூர்த்தன சில; சில தூர்க்கத் தூர்க்க நின்று
ஆர்த்தன; சில சில ஆடிப் பாடின.

பேர்த்தன மலை சில - சில வானரங்கள் மலைகளைப் பேர்த்தன;

பேர்க்கப் பேர்க்க நின்று ஈர்த்தன சில - சிலவானரங்கள் பெயர்த்த மலைகளை இழுத்துக் கொண்டுவந்தன;
சில சென்னி ஏந்தின- சில வானரங்கள் தலையில் தாங்கின;

தூர்த்தன சில- சில வானரங்கள் அதைக் கொண்டு கடலைத் தூர்த்தன;

சில தூர்க்கத் தூர்க்க நின்று ஆர்த்தன- சில வானரங்கள் மலைகளைக் கடலில் தூர்க்கத் தூர்க்க ஆரவாரம்செய்தன;

சில சில ஆடிப் பாடின- சில குரங்குகள் மகிழ்ச்சியால்
ஆடின சில குரங்குகள் இராமனது புகழைப் பாடின.

குரைகடலை யடலம்பால் மறுக வெய்து குலைகட்டி மறுகரையை யதனா லேரி என்கிறார் குலசேகர ஆழ்வார்.

குலை என்பது அணை ஆகும்.

#பாசுரப்படிராமாயணம் #pasurappadi #Ramayanam #பாசுரப்படி_ராமாயணம் 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காம தகனம்

பாசுரப்படி ராமாயணம் Part - 23