இடுகைகள்

தசரதனும், கரிய செம்மல் ராமனும்

படம்
  Pondy Bazaar Modi Road Show! Part - 1 மக்கள் வெள்ளத்தில் நடந்தது. கூடியிருந்தவர்கள் அனைவருக்கும் ஒரு விதமான பரவசம். ஏன் இந்த பரவசம்? எல்லாம் நம் தலைவன், தலைமகன் மோடியை காணப்போகிறோம் என்ற பூரிப்பால் ஏற்பட்டது. அந்த மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள். என்ன செய்கிறோம் என்று நிலை கொள்ளாமல் ஆடிப்பாடி ஆரவாரம் செய்து கொண்டாடினர். விடியலுக்கு முடிவு நெருங்கிவிட்டது என்ற மகிழ்ச்சி! திராவிடம் ஒழிந்தது என்ற மகிழ்ச்சி! நல்லாட்சிக்கான தொடக்கம் என்ற மகிழ்சசி! இதையெல்லாம் கொண்டாடும் விதமாக ஆடினார்கள். எப்படி ஆடினார்கள்(ஆடினோம்) தெரியுமா? ஆடினர்; பாடினர்; அங்கும் இங்குமாய் ஓடினர்; உவகை மா நறவு உண்டு ஓர்கிலார்; ‘வீடினர் அரக்கர்’ என்று உவக்கும் விம்மலால். சூடினர். முறை முறை துவளத் தாள்- ஆடினார்கள்; பாடினார்கள; ஜெய கோஷம் எழுப்பினார்கள்; கொடியசைத்தார்கள்; இந்த குழுவிலிருந்து அடுத்த குழுவிற்கு ஓடினார்கள்; உவகை மா நறவு உண்டு - எங்கள் தலைவன் மோடி வருகிறான் என்ற மகிழ்ச்சியில் ஆடினார்கள். வீடினர் அரக்கர் - அழிந்தது திராவிடம், தொலைந்தது வெறுப்பரசியல், மாய்ந்து போதை சம்மராஜ்ஜியம் என்ற மகிழ்ச்சி பெருக்கால் ஆடினார...

மாலுக்கு

படம்
 புரட்டாசி மாதம் 🙏 நம்மாழ்வார் பராங்குச நாயகியாக தன்னை பாவித்து நாயக நாயகி பாவத்தில் பாசுரம் அருளியுள்ளார்  இங்கோ மாலின் மீது மையல் கொண்ட பறாங்குச  நாயகியைப் பற்றி அவர் தாய் பாடுவதாக பாசுரம் அமைத்துள்ளார் சுவாமி நம்மாழ்வார். மாலின் மீது மையல் கொண்டு, அவன் உலகளந்த அற்புதத்தை எண்ணி, அவன் செங்கண் அழகில் மயங்கி, என் மகள் அவள் கை வளைகளை இழந்து நிற்கின்றாள் என்கிறார் தாயார். மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு, நீலக் கருநிற மேக நியாயற்கு, கோலச்செந் தாமரைக் கண்ணற்கு, என் கொங்கலர் ஏலக் குழலி யிழந்தது சங்கே. இங்கு நம்மாழ்வார் தான், பராங்குசா நாயகி, அவரின் தாயார் ஆகிய மூன்று கதா பாத்திரங்களையும் செய்கிறார். #நம்மாழ்வார் #கதை_சொல்லும்_கோலம் #பிரபந்தம்  #திருவாய்மொழி

பாசுரப்படி ராமாயணம் Part - 27

படம்
பாசுரப்படி ராமாயணம் Part - 27 யுத்த காண்டம் சரண்புக குரைகடலை அடலம்பால் மறுக எய்து, கொல்லை விலங்கு பணிசெய்ய மலையதனால் அணை கட்டி மறுகரையை ஏறி விபீஷணன் வந்து சரணடைந்த பின் கடலைக் கடந்து செல்ல உபாயம் என்ன என்று சிந்தைகளானார்கள். ராமன் வீடனனை நோக்கி, கிடக்கும் வண்ண வெங் கடலினைக் கிளர் பெருஞ் சேனை கடக்கும் வண்ணமும் எண்ணுதி எண்ணு நூல் கற்றாய்! ‘ நல்ல நூல்களை கற்றவனே, விபீஷணா, நம் எதிரே கிடக்கும் நீல வண்ணம் உடைய கொடிய கடலை, கிளர்ந்து எழுந்து நிற்கும் நம் சேனை கடந்து செல்லும் வழியைச் சிந்திப்பாயாக என்றான். குரைகடலை அடலம்பால் மறுக எய்து - ஆற்பரிக்கின்ற கடலை கலங்கும்படி அம்பு எய்து, கொல்லை விலங்கு பணிசெய்ய - கொல்லை என்றால் முட்செடிகள், மரங்கள்,பராமரிக்கப்படாத காடு; காட்டி விலங்குகள் பனி செய்ய மலையை பெயர்த்து வந்து அதன் பாறைகளையும் மரங்களையும் போட்டு கடலை நிறத்து அணைகட்டி மறு கரையை வந்தடைந்தனர். பேர்த்தன மலை சில; பேர்க்கப் பேர்க்க, நின்று ஈர்த்தன சில; சில சென்னி ஏந்தின; தூர்த்தன சில; சில தூர்க்கத் தூர்க்க நின்று ஆர்த்தன; சில சில ஆடிப் பாடின. பேர்த்தன மலை சில - சில வானரங்கள் மலைகளைப் பேர்த்தன; பேர்...

பாசுரப்படி ராமாயணம் Part - 26

படம்
பாசுரப்படி ராமாயணம் Part - 26 யுத்த காண்டம் கான எண்கும் குரங்கும் முசுவும் படையாக் கொடியோன் இலங்கை புகலுற்று அலையார் கடற்கரை வீற்றிருந்து செல்வ வீடணற்கு நல்லவனாய் விரிநீர் இலங்கை அருளிச் சரண்புக காட்டுக்கரடிகளையும், குரங்குகளையும், ‘முசு’ என்னுஞ்சாதிக் குரங்குகளையும், சேனையாகக்கொண்டு ராம பிரான் தென் கரை வந்து சேர்ந்தான். அங்கிருந்து கொடியவனான ராவணனுடைய ஊருக்குள் செல்வதற்காக அலையெறிகிற கடற்கரையில் ராமன் வீற்றிருந்தான். அப்போது அங்கு வந்து சரணடைந்த விபீஷணனுக்கு அப்போதே இலங்கைக்கு அரசன் நீ என்று சரணம் அளித்தான். #பாசுரப்படிராமாயணம்   #pasurappadi   #Ramayanam   #பாசுரப்படி_ராமாயணம்

பாசுரப்படி ராமாயணம் Part - 25

படம்
பாசுரப்படி ராமாயணம் Part - 25 சுந்தர காண்டம் அன்னையை சந்தித்து, சூடாமணியைப் பெற்று, தன் வருகையை இராவணனுக்கு உணர்த்த அசோகவனத்தை சுற்றியுள்ள வனம் அழித்து அரக்கர்களை விசிறி அடித்து, அக்கக்குமாரனை செஞ்சாந்து குழம்பு போல் தேய்த்து பின் இராவணன் அவைக்கு பிரமாஸ்ததிரத்தில் கட்டுண்டு சென்றான் அனுமன். திறல் விளங்கு மாருதியும்   இலங்கையர் கோன்மாக் கடிகாவை இறுத்துக் காதல் மக்களும சுற்றமும் கொன்று  கடி இலங்கை மலங்க எரித்து  அரக்கர் கோன் சினம் அழித்து, மீண்டு, அன்பினால், அயோத்தியர் கோன் தளிர் புரையும் அடி இணை பணிய; அங்கு அவன் வாலில் கொளுத்த வைத்த தீயை கொண்டு இலங்கையை தீக்கு இரையாக்கினான். மீண்டு வந்து அண்ணலை அடைந்து, தென் திசை வணங்கி, கண்டேன் சீதையை கண்டேன் சீதையை! கண்டனன் கற்பினுக் கணியினை கண்களால் என்றான். #பாசுரப்படிராமாயணம் #pasurappadi #Ramayanam #பாசுரப்படி_ராமாயணம்

பாசுரப்படி ராமாயணம் Part - 24

படம்
பாசுரப்படி ராமாயணம் Part - 24 சுந்தர காண்டம் அனுமன் நீட்டிய கணையாழியைக் கண்டதும் சீதை ஆழியானைக் கண்ட இன்பம் எய்தினாள். கம்பன் ஒரு பெண்ணாக சீதை அடைந்த இன்பத்தை கவி நயம் சொட்ட வழங்கியுள்ளார். மாணிக்கத்தை இழந்த நாகம் மீண்டும் பெற்றது போலவும், இழந்த செல்வத்தை அடைந்தவர் போலவும், பிள்ளை பேறு இல்லாதவர் பிள்ளை பெற்றால் அடையும் இன்பம் பெற்றாள். வாங்கினள் : முலைக்குவையில் வைத்தனள் : சிரத்தால் தாங்கினள் : மலர்க்கண் மிசை ஒத்தினள் : தடம்தோள் வீங்கினள், மெலிந்தனள் : குளிர்ந்தனள், வெதுப்போடு ஏங்கினள் : உயிர்த்தனள் : இது இன்னது எனல் ஆமே? வாங்கிக் கொண்டாள். அப்படியே மார்போடு அனைத்துக் கொண்டாள், தலையின் மேல் வைத்துக் கொண்டாள், கண்களில் ஒற்றிக் கொண்டாள், தோள்கள் பூரித்தாள், உடல் குளிர்ந்தாள், வெப்படைந்தாள், ஏங்கினாள், அவள் அடைந்த நிலையை சொல்லவும் கூடுமோ என்கிறான். ***** *****. *****. ***** மலர்க் குழளால் சீதையும், வில் இறுத்தான் மோதிரம் கண்டு அனுமான் அடையாளம் ஒக்கும் என்று உச்சிமேல் வைத்து உகக்க, *****. *****. *****. ***** சீதை ராமனின் மோதிரம் கண்டு, அனுமன் கூறிய அடையாளங்கள் சரி என்று ...

பாசுரப்படி ராமாயணம் Part - 23

படம்
பாசுரப்படி ராமாயணம் Part - 23 சுந்தர காண்டம் இலங்கையின் காவலைக் கடந்து, வைதேஹியைத் தேடி இறுதியில் அவளை அசோகவனத்தில் கண்டான் அனுமன். துயரத்தின் விளிம்பில்ஸ் இருந்த அன்னையோடு பேசினான். அவள் நம்பிக்கையைப் பெற ராம காதையைக் கூறினான். வாராரும் முலைமடவாள் வைதேகி தனைக்கண்டு 'நின் அடியேன் விண்ணப்பம் கேட்டருளாய்!  அயோத்தி தன்னில் ஓர், இடவகையில் எல்லிஅம்போதுஇனிதுஇருக்க  மல்லிகைமாமாலை கொண்டு அங்கு ஆர்த்ததுவும்;  கலக்கியமாமனத்தினளாய் கைகேயி வரம் வேண்ட  மலக்கியமாமனத்தினனாய்மன்னவனும் மறாதொழியக் 'குலக்குமரா! காடு உறையப்போ என்று விடைகொடுப்ப இலக்குமணன் தன்னோடு அங்கு ஏகியதும் கங்கை தன்னில் கூர் அணிந்த வேல்வலவன்குகனோடு  சீர் அணிந்த தோழமை கொண்டதுவும்;  சித்திரகூடத்து இருப்பப் பரதநம்பி பணிந்ததுவும்;  சிறுகாக்கை முலை தீண்ட அனைத்துலகம் திரிந்து ஓடி  'வித்தகனே !ராமவோ ! நின்அபயம் ! ' என்ன  அத்திரமேஅதன்கண்ணைஅறுத்ததுவும்;  பொன்ஒத்த மான்ஒன்று புகுந்து இனிது விளையாட  நின் அன்பின்வழிநின்று சிலைபிடித்து எம்பிரான் ஏகப்  பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததுவும்...