தசரதனும், கரிய செம்மல் ராமனும்
Pondy Bazaar Modi Road Show!
Part - 1
மக்கள் வெள்ளத்தில் நடந்தது.
கூடியிருந்தவர்கள் அனைவருக்கும் ஒரு விதமான பரவசம்.
ஏன் இந்த பரவசம்?
எல்லாம் நம் தலைவன், தலைமகன் மோடியை காணப்போகிறோம் என்ற பூரிப்பால் ஏற்பட்டது.
அந்த மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள். என்ன செய்கிறோம் என்று நிலை கொள்ளாமல் ஆடிப்பாடி ஆரவாரம் செய்து கொண்டாடினர்.
விடியலுக்கு முடிவு நெருங்கிவிட்டது என்ற மகிழ்ச்சி!
திராவிடம் ஒழிந்தது என்ற மகிழ்ச்சி!
நல்லாட்சிக்கான தொடக்கம் என்ற மகிழ்சசி!
இதையெல்லாம் கொண்டாடும் விதமாக ஆடினார்கள். எப்படி ஆடினார்கள்(ஆடினோம்) தெரியுமா?
ஆடினர்; பாடினர்; அங்கும் இங்குமாய்
ஓடினர்; உவகை மா நறவு உண்டு ஓர்கிலார்;
‘வீடினர் அரக்கர்’ என்று உவக்கும் விம்மலால்.
சூடினர். முறை முறை துவளத் தாள்-
ஆடினார்கள்; பாடினார்கள; ஜெய கோஷம் எழுப்பினார்கள்; கொடியசைத்தார்கள்; இந்த குழுவிலிருந்து அடுத்த குழுவிற்கு ஓடினார்கள்;
உவகை மா நறவு உண்டு - எங்கள் தலைவன் மோடி வருகிறான் என்ற மகிழ்ச்சியில் ஆடினார்கள்.
வீடினர் அரக்கர் - அழிந்தது திராவிடம், தொலைந்தது வெறுப்பரசியல், மாய்ந்து போதை சம்மராஜ்ஜியம் என்ற மகிழ்ச்சி பெருக்கால் ஆடினார்கள்
முறை முறை சூடினர் - கூப்பிய கரங்கள் இறங்கவே இல்லை.
பாரத பிரதமர் மோதி அவர்களை கண்டு மகிழ்ச்சியில் பெருமிதத்தில் திளைத்தார்கள்.
அந்த வேளையில் ரதத்தில் மோதி அவர்கள் வருகிறார் என்று ஒலிப்பெருக்கி அறிவிக்க இன்னும் உற்சாகம் அடைந்தனர்.
பிரதமருடன் மாநிலத்தலைவர் திரு அண்ணாமலை வருகிறார் என்ற அறிவிப்பு வந்ததும்,
"என்று அவன் உரைத்தபோது. எழுந்து துள்ளினார்;
நன்றிகொள் மங்கல நாதம் பாடினார்;"
மக்கள் நடுவே ஏற்பட்ட ஆரவாரத்தை வருணிக்க வார்த்தை இல்லை. புது சக்தி பெற்றது போல் துள்ளினர். கரகோஷம் எழுப்பினர். விசில் பறந்தது. பெண்கள் குலவையிட்டனர்.
மீண்டும் மோடி !
வேண்டும் மோடி !
என்றும் மோடி !
என்றென்றும் மோடி!
எங்கள் குடும்பம்!
மோடியின் குடும்பம்!
என்ற மங்கல வாழ்த்தால் வெளியை நிறைத்தனர்.
அங்கு அப்போது பாரதப் பிரதமர் மோதியுடன், மாநில தலைவர் K.Annamalai அண்ணாமலை அவர்கள் தோன்றிய காட்சி,
தசரதனும், கரிய செம்மல் ராமனும் வருவது போல் இருந்தது.
தசரதன் முகத்தில் என்ன மகிழ்ச்சி, அண்ணாமலையை பெருமிதத்தோடு அவ்வப்போது பார்த்துக்கொண்டே வந்தார். அண்ணாமலை, ராமனைப் போல சித்திரத்து எழுதிய ஓவியம் போல, தலைவனின் மெய்க்காப்பாளன் போல அவர் அடியொற்றி நின்றார்.
தசரதன் ராமனை, வாராது வந்த மாமணியே, அண்ணாமலையை நமக்கு தந்திருக்கிறார், கோசாலையாய் இருந்து அவருக்கு ஆதரவு கரம் நீட்டுவது நம் கடமை.
கருத்துகள்
கருத்துரையிடுக