இடுகைகள்

ஜூலை, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பாசுரப்படி ராமாயணம் Part - 12

படம்
பாசுரப்படி ராமாயணம்  Part - 12 அயோத்தியா காண்டம் "சித்திரக்கூடத்து  இருப்ப, தயரதன் தான் நின் மகன் மேல் பழி விளைத்திட்டு   என்னையும் நீள் வானில் போக்க என் பெற்றாய் கைகேசீ! நானும் வானகமே மிக விரும்பிப் போகின்றேன் என்று வான் எறத் " கங்கையைக் கடந்து சித்திரக்கூடம் வந்தடைந்தனர். அங்கு ராமனைப் பிரிந்த துயரால் வாடிய தயரதன், உன் மகன்  பரதனுக்கு பழி ஏற்படுத்தி என்னையும் நீள் வானத்துக்கு செலுத்துவதால் என்ன பெற்றாய் கைகேயி! நானும் வானகம் செல்கிறேன் என்று தசரத சக்ரவர்த்தி வானேறினான். இந்த வரிகளும் பெருமாள் திருமொழியில் குலசேகர ஆழ்வார் பாசுரத்தில் இருந்து தொகுக்கப் பட்டுள்ளது.  கம்பன்,  நினையும் தேவர்க்கும் நமக்கும் ஒத்து,      ஒரு நெறி நின்ற அனகன், அம் கணன், ஆயிரம்      பெயருடை அமலன், சனகன் மா மடமயிற்கு அந்தச்      சந்தனம் செறிந்த கனக மால் வரை இயல்பு எலாம்      தெரிவுறக் காட்டும். தேவர்க்கும் மானுடர்க்கும் சம நிலையில் நின்று அருளும் ஆயிரம் நாமங்களையுடைய ராமன்,   சனக...

பாசுரப்படி ராமாயணம் Part - 11

படம்
 பாசுரப்படி ராமாயணம்  Part - 11 அயோத்தியா காண்டம் நாடு துறந்து காடு சென்ற ராமன் கங்கையை அடைந்தான். அங்கே பக்தியோடு குகன் வந்து எதிர் கொண்டான். இதைக்  கம்பன் "விரி திரைப் புனல் கங்கையை மேவினார்", அகண்டு விரிந்து நுரை ததும்பும் அலைகளையுடைய கங்கையை அடைந்தனர். கம்பன் குகனை அறிமுகப் படுத்தும்போது, ஆய காலையின் ஆயிரம் அம்பிக்கு நாயகன் போர்க் குகன் எனும் நாமத்தான் தூய கங்கைத் துறை விடும் தொன்மையான் காயும் வில்லினன் கல் திரள் தோளினான். அந்தக் காலையில், ஆயிரம் நாவாய்களுக்கு சொந்தக்காரன், தூய்மையான கங்கையில் பல ஆண்டுகளாக படகு ஓட்டுபவன், பகைவரை வெல்லும், சீறி பாயும் அம்புகளை உடையவன், கல் போன்ற தோள்களை உடையவன் அன்பன் குகன் என்ற பெயருடையவன் வந்தான் என்பான். பக்தியுடைக் குகன் கடத்தக்கங்கை தன்னைக் கடந்து   வனம் போய்ப்புக்கு காய்யோடு நீடு கனி உண்டு  வியன்கானம் மரத்தின் நீழல்  கல்லணை மேல் கண்துயின்று குகன் ராமனை உபசரித்து தன்னோடு தங்கி விடுமாறு வேண்டினான், அதை மறுத்த ராமனை தன்னுடைய படகில் கங்கையைக் கடந்து அக்கரையில் விட்டான். அங்கிருந்து காட்டில் விளைகின்ற காயையும் கனி...

பாசுரப்படி ராமாயணம் Part - 10

படம்
 பாசுரப்படி ராமாயணம்  Part - 10 அயோத்தியா காண்டம் கொடியவள் வாய்க்கடிய சொற்கேட்டு மலக்கிய மாமனத்தினனாய் மன்னவனும்மறாது ஒழிய  குலக்குமரா ! காடுறையப் போ என்று விடை கொடுப்ப  இருநிலத்தை வேண்டாது  ஈன்று எடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கொழிந்து  மைவாய களிறொழிந்து  மாஓழிந்து தேர்ஒழிந்து கலன் அணியாதே காமர் எழில்விழல் உடுத்து  அங்கங்கள் அழகுமாறி  மான்அமரும் மெல் நோக்கி  வைதேகி இன்துணையா  இளங்கோவும் வாளும்  வில்லும்கொண்டுபின் செல்லக் கலையும் கரியும் பரிமாவும்  திரியும் கானம் நடந்து போய் கூனியின் சொல்கேட்டு, மனம் மாறிய கைகேயி தசரதனிடம்  இரெண்டு  வரங்களைப் பெற்றாள். கலங்கிய மனம் கொண்டவனாய் தசரதன் தவிக்க, குலக் கொழுந்தான ராமன், அரண்மனை விட்டு, அரசு துறந்து,  பெற்ற தாயாரை விட்டு, பிறந்த மண்ணை விட்டு, பட்டாபிஷேகம் துறந்து, பட்டத்து யானையை விட்டு, தேரை விட்டு, நாட்டை விட்டு, அணிகலன் களை விட்டு, மரவுறி தரித்து, உரு மாறி, கையில் வில்லும் அம்பும் ஏந்தி, மை விழியாள் ஜானகியுடன், தம்பி இலக்குமணன் பின் தொடர 14 ஆண்டுகள் வனவாசம் செ...

பாசுரப்படி ராமாயணம் Part - 9

படம்
பாசுரப்படி ராமாயணம் Part - 9 அயோத்தியா காண்டம் கொங்கைவன் கூனி சொற்கொண்டு கொடிய கைகேயி வரம் வேண்ட கொடியவள் வாய்க்கடியசொற்கேட்டு ராமனுக்கு முடி சூட்டு விழா நாளை என்றறிந்த வன் மனக் கூனி சொல் கேட்டு அதனால் கொடிய வரம் இரண்டை தன் மகன் பரதன் நாடாள வேண்டும் என்றும், ராமன் 14 ஆண்டுகள் காடாள வேண்டும் என்றும் கேட்டாள். கம்பன், தோன்றிய கூனியும், துடிக்கும் நெஞ்சினாள்; ஊன்றிய வெகுளியாள்; உளைக்கும் உள்ளத்தாள்; கான்று எரி நயனத்தாள்; கதிக்கும் சொல்லினாள்; மூன்று உலகினுக்கும் ஓர் இடுக்கண் மூட்டுவாள். ராமனுக்கு பட்டாபிஷேகம் என்று நகர மக்கள் கொண்டாடுவதைக் கண்ட கூனி, கோபத்தால் துடிக்கின்ற நஞ்சை உடையவளாக, சினம் நிலை கொண்டவளாக, மனம் நிறைந்த வேதனை உடையவளாக, நெருப்பை கக்கும் , எரிகின்ற கண்களை உடையவளாக, மூன்று உலகங்களுக்கும் தீராத துன்பத்தை மூட்டுபவளாகத் தோன்றினாள். கூனி சொல்வதைக் கேட்ட கைகேயி மனம் மகிழ்ந்து அவளுக்கு அணிகளுக்கு நாயகமாக விளங்கும் ஓர் மாலையை பரிசாக கொடுத்தாள். சுடர்க்கு எலாம் நாயகம் அனையது ஓர் மாலை நல்கினாள். அதை எறிந்த கூனி கைகேயி மனதில் நஞ்சை விதைத்து அவளை தசரதனிடம் இரண்டு வரம் கேட்டுப் ப...

பாசுரப்படி ராமாயணம் Part -8

படம்
 பாசுரப்படி ராமாயணம் Part -8 பாலகாண்டம் சீதா கல்யாணம் இனிதே நடைபெற்றது. ஜனக மஹாராஜாவிடமிருந்து விடைப் பெற்று தசரத சக்ரவர்த்தி தன் பரிவாரங்களோடு அயோத்தி மாநகருக்கு கிளம்பினார். வழியிலே அவர்களை பரசுராமன் இடைமறித்து அது பழைய வில் என்னிடம் உன் வீரத்தை பராக்கிரமத்தை நிரூபி என்று சொல்ல தசரதன் அதிர்ந்தே போனார், இருபத்தொருகால் அரசு களைகட்ட  மழுவாளேந்திவெவ்வரிநற்சிலைவாங்கிவென்றிகொண்டு   அவன் தவத்தை முற்றும் செற்று, அம்பொன்நெடுமணிமாடஅயோத்திஎய்தி அரியணை மேல்  மன்னன்  ஆவான் நிற்க அப்படி அங்கு எதிர் பட்ட அரசர்களை எல்லாம் தன் மழு மற்றும் வாளால் வென்ற பரசுராமனது வில்லை நாணேற்றி வென்று அதற்கு பரிசாக அவன் வலிமையை பெற்று,  அவன்  தவம் செய்யும் பொருட்டு மலை மலைக்கு செல்ல அங்கிருந்து அரசாள அயோத்தி நோக்கி வந்தனர். பால காண்டம் நிறைவுபெற்றது. #பாசுரப்படிராமாயணம் #pasurappadi #Ramayanam #பாசுரப்படி_ராமாயணம் Part - 7 https://m.facebook.com/story.php?story_fbid=5790381104347931&id=100001282970920

பாசுரப்படி ராமாயணம் Part -6

படம்
  பாசுரப்படி ராமாயணம் Part -6 பாலகாண்டம் ******************************************** அகலிகைக்கு சாப விமோச்சனம் வழங்கிய பின் முனிவனும் அரச குமாரர்களும் மிதிலை வந்தடைந்தனர். ******* ****** ******* ****** ****** ****** கல்லைப் பெண்ணாக்கிக் காரார் திண் சிலை இறுத்து அங்கு ஜனக மஹாராஜா ஏற்பாடு செய்திருந்த வெளிவியில் சிவ தனுசு என்ற வில்லை நாண் ஏற்ற எடுத்து அதனை முறித்தான். கம்பன் இதை, தடுத்து இமையாமல் இருந்தவர், தாளில் மடுத்ததும், நாண் நுதி வைத்ததும், நோக்கார்; கடுப்பினில் யாரும் அறிந்திலர்; கையால் எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார் வலிமையான சேவகர்கள் பலரும் கொண்டு வந்து வைத்த சிவ தனுஷை எந்த ராஜகுமாரனும் அசைக்கவில்லை. சபையோர் அனைவரும் கண் கொட்டாமல் பார்த்து இருக்க, இளம் களிறு நடை பயின்று ராமன் சிவதனுசை எடுத்து, ஒரு முனையை காலால் பற்றி மறு நாணேற்ற வில் முறிந்தது. அது எவ்வளவு விரைவாக நடந்தது என்றால் ராமன் சிவ தனுசை எடுத்ததை பார்த்தவர்கள் அது இற்று விழுந்த ஒலியைத் தான் கேட்டனர். இனி கல்யாண வைபோகம். Part 5 https://m.facebook.com/story.php?story_fbid=5784664961586212&id=100001282970920 #...

பாசுரப்படி_ராமாயணம் Part -5

படம்
  #பாசுரப்படி_ராமாயணம் Part -5 #பாலகாண்டம் ****************************** தாடகை வதம் முடித்து விஸ்வாமித்ரர் வேள்வி காத்து முனிவரும் தசரத சக்ரவர்த்தியின் குமாரர்களும் அடர்ந்த காடு வழியே நடந்து சென்றனர். வழி முழுதும் மாமுனிவன் பாலகர்களுக்கு அந்த இடத்தின் சிறப்பு, வரலாறு என்று நடமாடும் பாடசாலையாகவே நடத்திக் கொண்டு வந்தான். அப்போது அவர்கள் வழியில் ஒரு அதிசயம் நடந்தது. ***************************************** வந்து எதிர்த்த தாடகைதன்உரத்தைக் கீறி வல்அரக்கர்உயிர்உண்டுகல்லைப்பெண்ணாக்கிக் ***************************************** அவர்கள் வழித்தடத்தில் ராமனின் பாத தூசிப் பட்டு ஒரு கல் பெண்ணாக மாறினாள். இதைக் கம்பன், கண்ட கல்மிசைக் காகுத்தன் கழல் - துகள் கதுவ.- உண்ட பேதைமை மயக்கு அற வேறுபட்டு. உருவம் கொண்டு. மெய் உணர்பவன் கழல் கூடியது ஒப்ப.- பண்டை வண்ணமாய் நின்றனள்; மா முனி பணிப்பான்; இவர்கள் வழித்தடத்தில் கிடந்த கல்லின் மீது ராமனின் பாதத் துகள் பட்டு, தன்னுடைய பழைய வடிவத்தில் அகலிகைத் தோன்றினாள். இது அஞ்ஞாமாகிய அறியாமை இருள் நீங்கி உண்மை உருவம் கொண்டு திருமாலின் திருவடிகளை அட...

பாசுரப்படி ராமாயணம் Part -4

படம்
  பாசுரப்படி ராமாயணம் Part -4 பாலகாண்டம் ராம லக்ஷ்மணர்கள் விஸ்வாமித்ர முனிவரின் வேள்வி காக்க அயோத்தி  விட்டு  தரு வனம் நோக்கி நடந்தார்கள். அங்கு, ******************************************** மந்திரம் கொள் மறைமுனிவன் வேள்விகாக்க நடந்து, வந்து எதிர்த்த தாடகை தன் உரத்தைக் கீறி வல் அரக்கர் உயிர் உண்டு ******************************************** வேள்விக்கு இடையூராக நின்ற தாடகையையும் சுபாகுவையும் ஓர் வெங்கணையால் வீழ்த்தினர். இதை கம்பன், எண்ணுதற்கு ஆக்க அரிது; இரண்டு மூன்று நாள்விண்ணவர்க்கு ஆக்கிய முனிவன் வேள்வியை மண்ணினைக் காக்கின்ற மன்னன் மைந்தர்கள் கண்ணினைக் காக்கின்ற இமையில் காத்தனர். விஸ்வாமித்ரர் தேவர்களுக்காக செய்த வேள்வியை, 6 நாட்கள், இரவும் பகலும், கண்ணை இமை காப்பது போல் இந்த மண்ணை ஆளும் தசரத சக்ரவர்த்தியின் புதல்வர்கள்,கற்பனைக்கு எட்டாத , நினைத்து பார்க்கவே முடியாத அளவுக்கு, நின்று காத்தார்கள். Part -3: https://m.facebook.com/story.php?story_fbid=5779001592152549&id=100001282970920 #பாசுரப்படிராமாயணம் #pasurappadi #Ramayanam #பாசுரப்படி_ராமாயணம்

பாசுரப்படி ராமாயணம் Part -3

படம்
பாசுரப்படி ராமாயணம்  Part -3 பாலகாண்டம்  ******************************* தயரதன் தன் மகனாய்த் தோன்றிக்  குணம்திகழ் கொண்டலாய் மந்திரம்கொள் மறைமுனிவன் வேள்விகாக்க நடந்து, ****************************************** தசரத சக்ரவர்த்தியின் மகனாகப் பிறந்து, மழை தரும் மேகம் போன்று கருமையாகவும், இனிமையாகவும், எல்லோரும் விரும்பு குணத்தவனாகவும் திகழும் ஸ்ரீ ராமன் மாதவனான விஸ்வாமித்ர முனிவனுடைய வேள்வியை காக்க தம்பியோடு காடு நோக்கி நடந்தான். கம்பன் இதைச் சொல்லும் போது, "வென்றி வாள் புடை விசித்து மெய்ம்மை போல், என்றும் தேய்வு உறாத் தூணி யாத்து இரு குன்றம் போன்று உயர் தோளில் கொற்றவில் ஒன்று தாங்கினான்; உலகம் தாங்கினான்." வெற்றியை தரும் வாளினை இடையில் கட்டிக் கொண்டு, உண்மை எப்படி அழியாத் தன்மை பெற்றதோ அதே போன்ற அழியாத் தன்மைப் பெற்ற அம்புகளை, என்றும் தேய்வே இல்லாத அம்புராப் பையில் இட்டு அதை தோளில் மாட்டிக் கொண்டான். குன்றம் போன்று உயர்ந்த தோளில் வெற்றி வில்லை வைத்துக் கொண்டான் இந்த உலகை காக்கும் ஸ்ரீ ராமபிரான் - உலகம் தங்கினான்.

பாசுரப்படி ராமாயணம் Part-1

படம்
  ராமாயணத்தை வேதத்தின் சாரம் என்பார்கள். கற்பார் ராம பிரானை அல்லால் மற்றும் கற்பாரோ என்ற நம்மாழவார் வாக்கு தொட்டு அனைத்து ஆழ்வார்களும் ராமனின் கல்யாண குணங்களில் ஈடுபட்டு பல பாசுரங்களை பாடியுள்ளனர். வால்மீகி ராமாயணமோ, திவ்யப் ப்ரபந்தமோ நம்மால் தினமும் சேவிக்க முடியாது என்று நமக்காக ஆழ்வார்களின் அமுத மொழியிலிருந்து எடுத்து தொடுத்து திவ்யப் பிரபந்த பாசுர ராமாயணம் அதாவது பாசுரப்படி ராமாயணம் என்று தொகுத்து வழங்கியுள்ளார் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை. இந்த ராமாயண மாதத்தில் பாசுரப்படி ராமாயணத்தை அனுபவிக்கலாம். பால காண்டம் "திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழ நலம் அந்தம் இல்லது ஓர் நாட்டில் அந்தம் இல் பேரின்பத்து அடியரோடு ஏழ் உலகும் தனிக் கோல் செல்ல வீற்றிருக்கும் அயர்வு அறும் அமரர்கள் அதிபதியான அணி ஆர் பொழில்சூழ் அரங்க நகர் அப்பன் அலை நீர்க் கடலுள் அழுந்தும் நாவாய்போல் ஆவார் ஆர் துணை என்று துளங்கும்நல் அமரர் துயர் தீர வல் அரக்கர் வாழ் இலங்கை பாழ்படுக்க எண்ணி மண் உலகத்தோர் உய்ய அயோத்தி என்னும் அணி நகரத்து வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்கு ஆக "*****************************************...

பாசுரப்படி ராமாயணம் Part -2

படம்
  Pasurappadi Ramayanam பாசுரப்படி ராமாயணம்  Part -2 பாலகாண்டத்தின் தொடர்ச்சி இன்றைய ,பகுதி **************************************************************** மண் உலகத்தோர் உய்ய, அயோத்தி எனும் அணி நகரத்து, வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய், கௌசலை தன் குல மதலையாய், தயரதன் தன் மகனாய்த் தோன்றி ************************************************************** என்று மாந்தர் எல்லாம் உய்வு பெற, நிலமைகளின் நெற்றிப் பொட்டுப் போல் விளங்கும் அயோத்தி மாநகரில், சூரிய வம்சத்தில் தசரத சக்ரவர்த்தியின் மகனாக, மன்னு புகழ் கோசலையின் செல்வனாக ஸ்ரீ ராமன் ஒரு பகலில் அவதரித்தான். கம்பன் சொல்லும் போது, 'வளையடு திகிரியும், வடவை தீதர விளைதரு கடுவுடை விரிகொள் பாயலும், இளையர்கள் என அடி பரவ ஏகி, நாம், வளைமதில் அயோத்தியில் வருதும்' என்றனன் என்று சொல்கிறார். நான், என்னுடைய சங்கு, சக்கரம், வடவை தீயை விட கொடிய விஷம் உடைய பாயல் ஆகிய ஆதிசேஷன் ஆகியோர் என் சகோதரர்களாகவும் பெரிய மதில் சுவர்களை உடைய அயோத்தி மாநகரில் தசரதன் மதலையாய் பூமிக்கு வருகிறேன் என்றார் எம்பெருமான். திருஅவதாரம் ஆயிற்று!