பாசுரப்படி ராமாயணம் Part -8

 பாசுரப்படி ராமாயணம்

Part -8

பாலகாண்டம்


சீதா கல்யாணம் இனிதே நடைபெற்றது.

ஜனக மஹாராஜாவிடமிருந்து விடைப் பெற்று தசரத சக்ரவர்த்தி தன் பரிவாரங்களோடு அயோத்தி மாநகருக்கு கிளம்பினார்.


வழியிலே அவர்களை பரசுராமன் இடைமறித்து அது பழைய வில் என்னிடம் உன் வீரத்தை பராக்கிரமத்தை நிரூபி என்று சொல்ல தசரதன் அதிர்ந்தே போனார்,


இருபத்தொருகால் அரசு களைகட்ட 


மழுவாளேந்திவெவ்வரிநற்சிலைவாங்கிவென்றிகொண்டு  


அவன் தவத்தை முற்றும் செற்று,


அம்பொன்நெடுமணிமாடஅயோத்திஎய்தி


அரியணை மேல்  மன்னன்  ஆவான் நிற்க

அப்படி அங்கு எதிர் பட்ட அரசர்களை எல்லாம் தன் மழு மற்றும் வாளால் வென்ற பரசுராமனது வில்லை நாணேற்றி வென்று அதற்கு பரிசாக அவன் வலிமையை பெற்று,  அவன்  தவம் செய்யும் பொருட்டு மலை மலைக்கு செல்ல அங்கிருந்து அரசாள அயோத்தி நோக்கி வந்தனர்.


பால காண்டம் நிறைவுபெற்றது.


#பாசுரப்படிராமாயணம் #pasurappadi #Ramayanam #பாசுரப்படி_ராமாயணம்



Part - 7

https://m.facebook.com/story.php?story_fbid=5790381104347931&id=100001282970920

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காம தகனம்

பாசுரப்படி ராமாயணம் Part - 27

பாசுரப்படி ராமாயணம் Part - 23