பட்டினப் பிரவேசம் இன்று மைலாப்பூருக்கு ஒரு Flying visit செய்தேன். Lockdown முடிந்து breakdown (கதவை) செய்து வெளியில் வரவேண்டும் என்று நினைத்த நான் with lockdown without breakdown வெளியில் சென்று வந்தேன். எங்கே போன? ஏன் போன? வரேன் வரேன். அது என்னமோ என் பெண் படிக்கும் பள்ளியில் இந்த ஆண்டின் Fees DD - physical instrument வழங்கவேண்டும் என்று ஆணை. அதனால் DD யுடன் பள்ளிக்கு சென்றேன். காலை 8 மணி மயிலாப்பூர் பெங்களூரு போன்று காட்சி அளித்தது. ஆள் நடமாட்டமே இல்லை டீ கடை இல்லை. முதலில் என் கண்ணில் பட்ட நபர் மலர். மலர் எங்கள் பகுதியில் பல வீடுகளில் பனி புரிபவர். என்னை பார்த்ததும் எப்படி இருக்கீங்க? ஆள் அடையாளமே தெரியலை என்றதும் தூக்கி வாரி போட்டது. அவ்வளவு குண்டாகிவிட்டோமா என்ற எண்ணும்போதே mask போட்டதினால் தெரியவில்லை என்று சொல்லவும் ஆசுவாசப் படுத்த்திக் கொண்டு நடந்தேன். 5 நிமிட நடைக்குள் மாஸ்க் முழுவதும் அருவி போல் வேர்த்துக்கொட்டியது. கொஞ...