பட்டினப் பிரவேசம்

இன்று மைலாப்பூருக்கு ஒரு Flying visit செய்தேன்.
Lockdown முடிந்து breakdown (கதவை) செய்து வெளியில் வரவேண்டும் என்று நினைத்த நான் with lockdown without breakdown வெளியில் சென்று வந்தேன்.

எங்கே போன? ஏன் போன?
வரேன் வரேன்.
அது என்னமோ என் பெண் படிக்கும் பள்ளியில் இந்த ஆண்டின் Fees DD - physical instrument வழங்கவேண்டும் என்று ஆணை. அதனால் DD யுடன் பள்ளிக்கு சென்றேன்.

காலை 8 மணி மயிலாப்பூர் பெங்களூரு போன்று காட்சி அளித்தது. ஆள் நடமாட்டமே இல்லை  டீ கடை இல்லை. முதலில் என் கண்ணில் பட்ட நபர் மலர். மலர் எங்கள் பகுதியில் பல வீடுகளில் பனி புரிபவர். என்னை பார்த்ததும் எப்படி இருக்கீங்க? ஆள் அடையாளமே தெரியலை என்றதும் தூக்கி வாரி போட்டது. அவ்வளவு குண்டாகிவிட்டோமா என்ற எண்ணும்போதே mask  போட்டதினால் தெரியவில்லை என்று சொல்லவும் ஆசுவாசப் படுத்த்திக் கொண்டு நடந்தேன்.

5  நிமிட நடைக்குள் மாஸ்க் முழுவதும் அருவி போல் வேர்த்துக்கொட்டியது. கொஞ்சம் cheating செய்யலாம் என்று தாடைக்கு இறக்கி கொண்டேன். இறக்கியது தான் தாமதம் எதிரே நான்கு பேர் தென்பட்டனர். அவர்கள் horizontally social distancing செய்து சாலையை அடைத்துக் கொண்டு வந்தனர்.

தப்பிக்கும் உபாயத்தை யோசித்து, நான்கு அடி பின் சென்று ஓட்டமும் நடையுமாக வந்து, லேசாக புடவையை பிடித்தது கொண்டு 2 அடி உயர Road divider மீது ஏறி குதித்து அக்கரை அடைந்ததும் யாரு கிட்ட என்று மெலிதாக சிரித்துக் கொண்டேன்.

முச்சந்தி பிள்ளையார், முனீஸ்வரன் முதல், கோடி மரம் கொண்ட எந்த கோவிலும் நடை திறக்கவில்லை. நேய நிலைக் கதவம் நீக்கேலோர் என்று பாடிக்கொண்டே கன்னத்தில் போட்டுக் கொண்டேன்.
உறக்கப் பாடினேன் கேட்க ஆளே இல்லை.

இப்படியாக பள்ளி வந்தடைந்தேன்.
பள்ளி வாயிலில் செக்யூரிட்டி LKG குழந்தை போல யாராவது வர மாட்டார்களா என்ற ஏக்கத்துடன் நின்றனர். ஏக உபசரிப்பு. கோவில் தலைமை அர்ச்சகர் போல ஒரு security, (மடி மேல படாம தள்ளி நில்லுங்கோ)  வலது கையில் hand sanitizer எடுத்து அதை இடது கையால் தாங்கி தீர்த்தம் சாதிப்பது போல் வழங்கினார். கோவிலுக்கு போகவில்லை என்ற குறை தீர்ந்தது.

பள்ளியின் தலைமை clerk சலூன் இல்லாத காரணத்தால் டை அடித்துக்கொள்ளாமல், நரைத்த தாடி மீசை மாஸ்க்குடன் ஆஞ்சநேயர் போல் காட்சியளித்தார். வாய்  சும்மா இருக்காமல் மஹாபாரத ஆஞ்சநேயர்(கிழட்டு) போல இருக்கீங்க என்றேன். அவரோ பதிலுக்கு கருடன் மாதிரி இல்ல என்றார். ஆஹா ஆஹா என்ன சுப சகுனம் என்று DDயை  கொடுத்து வேலையை முடித்தேன்.

திரும்பி வரும் வழி கொஞ்சம் சுறுசுறுப்புடன்  இருந்தது. நெருங்கிய பாதை வரும்போது மழை நாளில் சேறு  படாமல் இருக்க படிகளில் ஒதுங்குவது போல் ஒதுங்கி, எதிர் பட்ட நபர்  போய் விட்டார்  என்று உறுதி செய்துக் கொண்டு இறங்கினேன். குறுகலான தெருவின் முக்கால்வாசி தாண்டும் போது சைக்கிளில் ஒருவர் எதிர் பட்டார். தளர்த்திய மாஸ்க்கை போட்டுக்க  எத்தணிக்கும் முன் வேகமாக அவர் தன் மாஸ்க்கை போட்டு கொண்டு என்னை எங்கிட்டல்லாம் வேண்டாம் என்ற ஏளன பார்வை பார்த்துவிட்டு சென்றார்.
எதிர் படுபவர்கள் ஒருவரை ஒருவர் தீவிரவாதி போல் பார்ப்பது வேடிக்கையாக இருந்தது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காம தகனம்

பாசுரப்படி ராமாயணம் Part - 27

பாசுரப்படி ராமாயணம் Part - 23