தனியொருவனுக் குணவில்லை யெனில்
இன்று சுவாமி ஓம்காரானந்தாவின் பிறந்த தினம். திருவல்லிக்கேணியில் பாரதி வசித்து வந்தபோது ஒரு இரவில் யாரோ ஒருவர் வீட்டின் கதவை தட்டினார். தேச விடுதலைப் பாடலைப் பாடிக்கொண்டே பாரதி, கதவை திறந்தால் மெலிந்த தேகத்துடன், நோயுற்ற தோற்றத்துடன் ஒரு பிச்சைக் காரர். வாசலில் நின்றவரோ, என்ன சுவாமிகளே பாட்டு பாடிக் கொண்டு காலம் கழிக்க முடியுமா? தேச விடுதலைக்கு போராடிய எனக்கு சாப்பாட்டுக்கு வழி இல்லை. பிச்சை எடுக்கலாமா என்று இருக்கேன். பாரதி! எனக்கு பசிக்கிறது. நான் சாப்பிட்டு நான்கு நாட்கள் ஆகிவிட்டது என்றார். யார் நீ என்ற பாரதிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. என்னை தெரியலையா? நான் தான் ப்ரஹ்மச்சாரி, நீலகண்டன் என்றார். பாரதியாருக்கு ரத்தம் கொதித்தது. அவருக்கு சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்து அன்று அவர் பாடியது தனியொருவனுக் குணவில்லை யெனில் ஜெகத்தினை அழித்திடுவோம். ஆம் 20,000 வீரர்களுக்கு பயிற்ச்சி கொடுத்து, ரகசியமாக ஆயுதங்கள் வாங்கி, வீர் சாவர்க்கருடன் சேர்ந்து விடுதலை திட்டங்கள் தீட்டி, பாரத மாதா இயக்கத்தை- அபினவ பாரத இயக்கத்தைத் துவங்கி, சூரியோதயம் பத்திரிகை நடத்தி, மாப்ள போராட்டத்தில் ...