வீடினர் அரக்கர்

     

                                                        வீடினர் அரக்கர்

To make one's eyebrows raise while the curtain raises!
எடுத்த எடுப்பிலேயே பிரமிப்பை ஏற்படுத்துவதோடு துரிதமாக கதையையும் கொண்டு செல்வது கதாசிரியனின் தனித்துவம்.
கம்பன், கற்பனையிலும் அதை காட்சிப் படுத்துவதிலும் உயர்ந்து நிற்கிறான்.
தசரதன் தனக்குப் பின் அயோத்தி மக்களை காக்க, அவர்கள் நலனைப் பேண ஒரு வாரிசு வேண்டும் என்று சொல்லவும், வசிஷ்டர் தன் எண்ண அலைகளை முன்பு நடந்த சம்பவத்துக்கு ஓட்டுகிறார்.
தேவாதி தேவர்கள் அனைவரும் பிரம்ம தேவரிடம், அரக்கன் இராவணனின் கொடுமையினால் அவதிப்படுவதாகவும், பிரம்ம தேவர் அவர்களை காக்க வேண்டும் என்றும் கோரிக்கையை வைக்கின்றனர்.
இதை கேட்ட பிரம்மன், அவனுக்கு வரத்தை கொடுத்தவன் நான், என்னால் ஒன்றும் செய்ய முடியாது வாருங்கள் முக்கண்
மூர்த்தியை கண்டு பிரார்த்திப்போம் என்கிறார்.
வந்தவர்களின் விண்ணப்பத்தை கேட்ட சிவன், நானும் வரம் அளித்துள்ளேன் என்னால் ஒன்றும் செய்ய முடியாது. இதிலிருந்து விடுவிக்க திருமாலால் தான் முடியும். அவரை சந்திப்போம் என்கிறார்.
Curtain goes up!
Hero entry scene.
Every one is waiting with bated breath.
அப்படி வானோர்கள் எல்லாம் நினைத்த உடனேயே கரிய மேனி, தாமரைக் கண்ணன், ஆழ்வார் சொல்வது போல் கண் கமலம் , வாய் கமலம், முகம் கமலம், தோள் கமலம், நாபிக் கமலம், திருவடி கமலம் என்று கரிய மேனியில் தாமரைக் காடு பூத்தது போல் இருந்ததாம்.
சந்திரனையும் சூரியனையும் இரு தோள்களில் தாங்கி, செங்கமலத்தில் வீற்றிருக்கும் திருமாமகளும் ஒளி வீச, ஒரு பொன் மலை வந்து இறங்குவது போல் கருடன் மீது திருமால் தோன்றினான் என்கிறார்.
கரு முகில் தாமரைக் காடு பூத்து, நீடு
இரு சுடர் இரு புறத்து ஏந்தி, ஏந்து அலர்த்
திருவொடும் பொலிய, ஓர் செம்பொன் குன்றின்மேல்
வருவபோல், கலுழன்மேல் வந்து தோன்றினான்
தோற்றப் பொலிவை கண்ட மாத்திறத்தில் வானோர்கள் மகிழ்ச்சியில் வெற்றி கோஷம் எழுப்பினர்.
கட்டுக் கடங்காத இன்பவெள்ளத்தில் திளைத்து, மெய் மறந்து ஆடினார்கள், பாடினார்கள், செய்வதறியாது குறுக்கும் நெடுக்கும் ஓடினார்கள் வீழ்தனர் அரக்கரென்று என்று கோஷம் எழுப்பிக் கொண்டு மீண்டும் மீண்டும் திருமாலின் திருவடியினை தொழுதார்கள்.
ஆடினர் பாடினர் அங்கும் இங்குமாய்
ஓடினர் உவகை மா நறவு உண்டு ஓர்கிலார்;
'வீடினர் அரக்கர்' என்று உவக்கும் விம்மலால்
சூடினர் முறை முறை துளவத் தாள்-மலர்
திருமால் தாயாருடன் தோன்றியதும் அரக்கர் வீழ்தனர் என்று வானோர் மகிழ்தனர்.
அன்று மட்டுமல்ல இன்றும் ஒருவர் வருகிறேன் என்று சொன்னதும் செத்தான் எதிரி என்ற மகிழ்ச்சி நமக்கு ஏற்படுகிறது.
Image may contain: 5 people, including SathChith Moksha and Venkatesan R

#

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காம தகனம்

பாசுரப்படி ராமாயணம் Part - 27

பாசுரப்படி ராமாயணம் Part - 23