இடுகைகள்

மார்ச், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கனவு மெய்ப்பட வேண்டும்

படம்
 தென்திருப்பேரை  இந்த ஊரில் கோவில் கொண்டுள்ள சுவாமி மகர நெடுங் குழைக்காதனுக்கு ப்ரஹ்மோத்சவம் நடைப் பெற்று வருகிறது. இன்று ஐந்தாம் திருநாள்.  பெருமாள் கருட வாகனத்தில் சேர்வை சாதிக்கிறார்.  செம்பொன் குன்றின் மேல் தோன்றினான் என்று கம்பன் சொல்வது போல் இருக்கும் இந்த கருடவாஹன காட்சி.  தங்கத்தால் ஆன ஐந்தடி கருடன் மேல் அருமையான கொலு மேளத்துக்கும் மல்லாரிக்கும் அசைந்து வருவது ஒரு தேவலோக காட்சி போல் இருக்கும். நம்மாழ்வார் வெள்ளை சுரி சங்கொடு ஆழி ஏந்தி என்ற பாசுரத்தில் தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே புள்ளை கடாவுகின்ற ஆற்றை காணீர் என்கிறார். தன்னை பெண்ணாக பாவித்துக் கொண்டு, மணிவண்ணன் புள் அரசனாகிய கருடன் மீது பறக்கும் காட்சியை பாடுகிறார். பொதுவாக வைணவத் திருக்கோயில்களில் பெருமாள் சந்நிதிக்கு நேர் எதிரே கருடன் சந்நிதி அமைந்து இருக்கும்.   தென்திருப்பேரையில் வேத ஒலியும், விழா ஒலியும், பிள்ளை குழாம் விளையாட்டு ஒலியும் காணவும் கேட்கவும் வழி விட்டு சற்றே தள்ளியிரும் பிள்ளாய் என்று பெருமாள் சொல்ல சந்நிதி கருடன் வழி விட்டு விலகி இருக்கிறார் . முன்பொரு நாள் எங்கள் ஊரின்...

கம்ப ராமாயண அரங்கேற்றம்

சிரித்தது செங்கட் சீயம் - கம்ப ராமாயண   அரங்கேற்றம்   கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு   வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு   கல்வியில் பெரியான்    கம்பன்   தன்னுடைய   ஆழ்ந்த பக்தி மற்றும் காதலினால் ஆதிகவி வால்மீகி ராமாயணத்தை   பின்பற்றி வழி நூலாக ராம காதையை இயற்றினார்.   இந்த நூலை அரங்கேற்ற கற்றறிந்தார் போற்றும் திருவரங்கமே   சிறந்த அரங்கம் என்று எண்ணிய கம்பன் அரங்கத்து   அறிஞர்களிடம் தன்னுடைய விருப்பத்தை தெரிவித்தார்.   அவர்களோ   தில்லை அந்தணர்களின்   அனுமதியைப் பெற்று வரவும் என்றனர்.   கம்பன் தன் ஏடுகளோடு   சிதம்பரம் நோக்கி சென்றான். தில்லை அந்தணர்கள் 3000 பேரும் கூடியிருந்தால் மட்டும் ஓலையில் முத்திரை அளிக்க முடியும். அது நடக்காத காரியம் என்றனர்.   கம்பன் தான் எடுத்த முயற்சியை கை விடாமல் தொடர்ந்து பல நாட்களாக அந்தணர்களிடம்   கேட்டுக் கொண்டிருந்தார்.   ஒரு நாள் திடீரென தில்லை அந்தணர் 3000 பேரும் ஒரு வீட்டின் முன்பு கூடியிருந்தனர். ...
படம்
SrirangamFiles  இன்று திருவரங்கன் பங்குனி உத்சவம் 8ஆம் திருநாள். 13 நூற்றாண்டில் இதே நாளில், பெருமாள் வீதி உலாவில் எழுந்தருளி இருக்க உல்லு கானின் படை கோவிலை நோக்கி முன்னேறியது. மூலவர் சந்நிதியை உடனடியாக சுவர் எழுப்பி காத்தனர். உற்சவத்திலிருந்த நம்பெருமாளோடு காட்டு வழியாக ஸ்ரீரங்கத்தை விட்டு தெற்கு நோக்கி சென்றரர் சுவாமி பிள்ளை லோகாச்சாரியார். உல்லு கானின் படை முன்னேறி வர, திருவரங்கம் கோவிலைக் காக்க 12000 வைணவர்கள் தங்கள் இன்னுயிர் நீத்ததனர். உலூ கானின் கொலை வெறி தாக்குதலில் 12000 அப்பாவிகள் தங்கள் உயிரை தியாகம் செய்த தினம், பங்குனி உத்சவம் 8ஆம் திருநாள். திருவரங்கமே ரத்த வெள்ளத்தில் மிதந்தது. அதன் பின் இழந்த கோவிலை மீட்டெடுக்க 48 ஆண்டுகள், கம்பண்ணா வரும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. பன்னிராயிரம் திருமுடி திருத்தின கலகம் என்கிறது கோயிலொழுகு. இது #SrirangamFiles .