SrirangamFiles
இன்று திருவரங்கன் பங்குனி உத்சவம் 8ஆம் திருநாள்.
13 நூற்றாண்டில் இதே நாளில், பெருமாள் வீதி உலாவில் எழுந்தருளி இருக்க உல்லு கானின் படை கோவிலை நோக்கி முன்னேறியது.
மூலவர் சந்நிதியை உடனடியாக சுவர் எழுப்பி காத்தனர்.
உற்சவத்திலிருந்த நம்பெருமாளோடு காட்டு வழியாக ஸ்ரீரங்கத்தை விட்டு தெற்கு நோக்கி சென்றரர் சுவாமி பிள்ளை லோகாச்சாரியார்.
உல்லு கானின் படை முன்னேறி வர,
திருவரங்கம் கோவிலைக் காக்க 12000 வைணவர்கள் தங்கள் இன்னுயிர் நீத்ததனர். உலூ கானின் கொலை வெறி தாக்குதலில் 12000 அப்பாவிகள் தங்கள் உயிரை தியாகம் செய்த தினம், பங்குனி உத்சவம் 8ஆம் திருநாள்.
திருவரங்கமே ரத்த வெள்ளத்தில் மிதந்தது.
அதன் பின் இழந்த கோவிலை மீட்டெடுக்க 48 ஆண்டுகள், கம்பண்ணா வரும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.
பன்னிராயிரம் திருமுடி திருத்தின கலகம் என்கிறது கோயிலொழுகு.
கருத்துகள்
கருத்துரையிடுக