மாலுக்கு
புரட்டாசி மாதம் 🙏 நம்மாழ்வார் பராங்குச நாயகியாக தன்னை பாவித்து நாயக நாயகி பாவத்தில் பாசுரம் அருளியுள்ளார் இங்கோ மாலின் மீது மையல் கொண்ட பறாங்குச நாயகியைப் பற்றி அவர் தாய் பாடுவதாக பாசுரம் அமைத்துள்ளார் சுவாமி நம்மாழ்வார். மாலின் மீது மையல் கொண்டு, அவன் உலகளந்த அற்புதத்தை எண்ணி, அவன் செங்கண் அழகில் மயங்கி, என் மகள் அவள் கை வளைகளை இழந்து நிற்கின்றாள் என்கிறார் தாயார். மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு, நீலக் கருநிற மேக நியாயற்கு, கோலச்செந் தாமரைக் கண்ணற்கு, என் கொங்கலர் ஏலக் குழலி யிழந்தது சங்கே. இங்கு நம்மாழ்வார் தான், பராங்குசா நாயகி, அவரின் தாயார் ஆகிய மூன்று கதா பாத்திரங்களையும் செய்கிறார். #நம்மாழ்வார் #கதை_சொல்லும்_கோலம் #பிரபந்தம் #திருவாய்மொழி