இடுகைகள்

ஆகஸ்ட், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பாசுரப்படி ராமாயணம் Part - 27

படம்
பாசுரப்படி ராமாயணம் Part - 27 யுத்த காண்டம் சரண்புக குரைகடலை அடலம்பால் மறுக எய்து, கொல்லை விலங்கு பணிசெய்ய மலையதனால் அணை கட்டி மறுகரையை ஏறி விபீஷணன் வந்து சரணடைந்த பின் கடலைக் கடந்து செல்ல உபாயம் என்ன என்று சிந்தைகளானார்கள். ராமன் வீடனனை நோக்கி, கிடக்கும் வண்ண வெங் கடலினைக் கிளர் பெருஞ் சேனை கடக்கும் வண்ணமும் எண்ணுதி எண்ணு நூல் கற்றாய்! ‘ நல்ல நூல்களை கற்றவனே, விபீஷணா, நம் எதிரே கிடக்கும் நீல வண்ணம் உடைய கொடிய கடலை, கிளர்ந்து எழுந்து நிற்கும் நம் சேனை கடந்து செல்லும் வழியைச் சிந்திப்பாயாக என்றான். குரைகடலை அடலம்பால் மறுக எய்து - ஆற்பரிக்கின்ற கடலை கலங்கும்படி அம்பு எய்து, கொல்லை விலங்கு பணிசெய்ய - கொல்லை என்றால் முட்செடிகள், மரங்கள்,பராமரிக்கப்படாத காடு; காட்டி விலங்குகள் பனி செய்ய மலையை பெயர்த்து வந்து அதன் பாறைகளையும் மரங்களையும் போட்டு கடலை நிறத்து அணைகட்டி மறு கரையை வந்தடைந்தனர். பேர்த்தன மலை சில; பேர்க்கப் பேர்க்க, நின்று ஈர்த்தன சில; சில சென்னி ஏந்தின; தூர்த்தன சில; சில தூர்க்கத் தூர்க்க நின்று ஆர்த்தன; சில சில ஆடிப் பாடின. பேர்த்தன மலை சில - சில வானரங்கள் மலைகளைப் பேர்த்தன; பேர்...

பாசுரப்படி ராமாயணம் Part - 26

படம்
பாசுரப்படி ராமாயணம் Part - 26 யுத்த காண்டம் கான எண்கும் குரங்கும் முசுவும் படையாக் கொடியோன் இலங்கை புகலுற்று அலையார் கடற்கரை வீற்றிருந்து செல்வ வீடணற்கு நல்லவனாய் விரிநீர் இலங்கை அருளிச் சரண்புக காட்டுக்கரடிகளையும், குரங்குகளையும், ‘முசு’ என்னுஞ்சாதிக் குரங்குகளையும், சேனையாகக்கொண்டு ராம பிரான் தென் கரை வந்து சேர்ந்தான். அங்கிருந்து கொடியவனான ராவணனுடைய ஊருக்குள் செல்வதற்காக அலையெறிகிற கடற்கரையில் ராமன் வீற்றிருந்தான். அப்போது அங்கு வந்து சரணடைந்த விபீஷணனுக்கு அப்போதே இலங்கைக்கு அரசன் நீ என்று சரணம் அளித்தான். #பாசுரப்படிராமாயணம்   #pasurappadi   #Ramayanam   #பாசுரப்படி_ராமாயணம்

பாசுரப்படி ராமாயணம் Part - 25

படம்
பாசுரப்படி ராமாயணம் Part - 25 சுந்தர காண்டம் அன்னையை சந்தித்து, சூடாமணியைப் பெற்று, தன் வருகையை இராவணனுக்கு உணர்த்த அசோகவனத்தை சுற்றியுள்ள வனம் அழித்து அரக்கர்களை விசிறி அடித்து, அக்கக்குமாரனை செஞ்சாந்து குழம்பு போல் தேய்த்து பின் இராவணன் அவைக்கு பிரமாஸ்ததிரத்தில் கட்டுண்டு சென்றான் அனுமன். திறல் விளங்கு மாருதியும்   இலங்கையர் கோன்மாக் கடிகாவை இறுத்துக் காதல் மக்களும சுற்றமும் கொன்று  கடி இலங்கை மலங்க எரித்து  அரக்கர் கோன் சினம் அழித்து, மீண்டு, அன்பினால், அயோத்தியர் கோன் தளிர் புரையும் அடி இணை பணிய; அங்கு அவன் வாலில் கொளுத்த வைத்த தீயை கொண்டு இலங்கையை தீக்கு இரையாக்கினான். மீண்டு வந்து அண்ணலை அடைந்து, தென் திசை வணங்கி, கண்டேன் சீதையை கண்டேன் சீதையை! கண்டனன் கற்பினுக் கணியினை கண்களால் என்றான். #பாசுரப்படிராமாயணம் #pasurappadi #Ramayanam #பாசுரப்படி_ராமாயணம்

பாசுரப்படி ராமாயணம் Part - 24

படம்
பாசுரப்படி ராமாயணம் Part - 24 சுந்தர காண்டம் அனுமன் நீட்டிய கணையாழியைக் கண்டதும் சீதை ஆழியானைக் கண்ட இன்பம் எய்தினாள். கம்பன் ஒரு பெண்ணாக சீதை அடைந்த இன்பத்தை கவி நயம் சொட்ட வழங்கியுள்ளார். மாணிக்கத்தை இழந்த நாகம் மீண்டும் பெற்றது போலவும், இழந்த செல்வத்தை அடைந்தவர் போலவும், பிள்ளை பேறு இல்லாதவர் பிள்ளை பெற்றால் அடையும் இன்பம் பெற்றாள். வாங்கினள் : முலைக்குவையில் வைத்தனள் : சிரத்தால் தாங்கினள் : மலர்க்கண் மிசை ஒத்தினள் : தடம்தோள் வீங்கினள், மெலிந்தனள் : குளிர்ந்தனள், வெதுப்போடு ஏங்கினள் : உயிர்த்தனள் : இது இன்னது எனல் ஆமே? வாங்கிக் கொண்டாள். அப்படியே மார்போடு அனைத்துக் கொண்டாள், தலையின் மேல் வைத்துக் கொண்டாள், கண்களில் ஒற்றிக் கொண்டாள், தோள்கள் பூரித்தாள், உடல் குளிர்ந்தாள், வெப்படைந்தாள், ஏங்கினாள், அவள் அடைந்த நிலையை சொல்லவும் கூடுமோ என்கிறான். ***** *****. *****. ***** மலர்க் குழளால் சீதையும், வில் இறுத்தான் மோதிரம் கண்டு அனுமான் அடையாளம் ஒக்கும் என்று உச்சிமேல் வைத்து உகக்க, *****. *****. *****. ***** சீதை ராமனின் மோதிரம் கண்டு, அனுமன் கூறிய அடையாளங்கள் சரி என்று ...

பாசுரப்படி ராமாயணம் Part - 23

படம்
பாசுரப்படி ராமாயணம் Part - 23 சுந்தர காண்டம் இலங்கையின் காவலைக் கடந்து, வைதேஹியைத் தேடி இறுதியில் அவளை அசோகவனத்தில் கண்டான் அனுமன். துயரத்தின் விளிம்பில்ஸ் இருந்த அன்னையோடு பேசினான். அவள் நம்பிக்கையைப் பெற ராம காதையைக் கூறினான். வாராரும் முலைமடவாள் வைதேகி தனைக்கண்டு 'நின் அடியேன் விண்ணப்பம் கேட்டருளாய்!  அயோத்தி தன்னில் ஓர், இடவகையில் எல்லிஅம்போதுஇனிதுஇருக்க  மல்லிகைமாமாலை கொண்டு அங்கு ஆர்த்ததுவும்;  கலக்கியமாமனத்தினளாய் கைகேயி வரம் வேண்ட  மலக்கியமாமனத்தினனாய்மன்னவனும் மறாதொழியக் 'குலக்குமரா! காடு உறையப்போ என்று விடைகொடுப்ப இலக்குமணன் தன்னோடு அங்கு ஏகியதும் கங்கை தன்னில் கூர் அணிந்த வேல்வலவன்குகனோடு  சீர் அணிந்த தோழமை கொண்டதுவும்;  சித்திரகூடத்து இருப்பப் பரதநம்பி பணிந்ததுவும்;  சிறுகாக்கை முலை தீண்ட அனைத்துலகம் திரிந்து ஓடி  'வித்தகனே !ராமவோ ! நின்அபயம் ! ' என்ன  அத்திரமேஅதன்கண்ணைஅறுத்ததுவும்;  பொன்ஒத்த மான்ஒன்று புகுந்து இனிது விளையாட  நின் அன்பின்வழிநின்று சிலைபிடித்து எம்பிரான் ஏகப்  பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததுவும்...

பாசுரப்படி ராமாயணம் Part - 22

படம்
பாசுரப்படி ராமாயணம் Part - 22 சுந்தர காண்டம் சீராரும் திறல் அனுமன் மாகடலைக் கடந்தேறி மும்மதிள் நீள் இலங்கை புக்கு வலிமை பொருந்திய அனுமன் கடலைத் தாவி கடுங்காவல் நிறைந்த இலங்கைக்குச் சென்று சீதையை தேடினான். அனுமன் கடலைத் தாவும் காட்சி வெகு அழகானக் காட்சி, இதைக் கம்பன், குன்றொடு குணிக்கும் கொற்றக் குவவுத்தோள் குரக்குச் சீயம், சென்று உறு வேகத் திண்கால் எறிதரத், தேவர் வைகும் மின்தொடர் வானத்து ஆன விமானங்கள், விசையில் தம்மில் ஒன்றொடு ஒன்று உடையத் தாக்கி, மாக்கடல் உற்ற மாதோ! மலைக்குன்று போல் விளங்கும் பெரியத் தோள்களை உடைய வானர சிங்கமாகிய அனுமன் வேகமாகச்செல்வதால் உண்டான பெருங்காற்று மோத அதனால் தேவர்களின் விமானங்கள் ஒன்றோடொன்று தாக்கிக் கடலில் விழுந்தன. விளித்துப் பின் வேலை தாவும் வீரன் வால் - அனுமனுடைய வால் அவன் செல்கின்ற நோக்கம் கருதி , களித்துப் புன் தொழில் மேல் நின்ற அரக்கர் கண்ணுறுவர் என்ன ஒளித்துப் பின்செல்லும் காலன் பாசத்தை ஒத்தது அன்றே! கொலைத்தொழிலைக் கொண்ட அரக்கர் கண்டு கொள்வார் என்று அஞ்சி காலனின் பாசக் கயிறு எப்படி கண்ணுக்கு புலப்படாதோ அது போல் ஒளித்து...

பாசுரப்படி ராமாயணம் Part -21

படம்
பாசுரப்படி ராமாயணம் Part -21 கிஷ்கிந்தா காண்டம் வனமருவுகவிஅரசன் தன்னோடு காதல் கொண்டு மராமரங்கள்ஏழும் எய்து உருத்து ஏழு வாலி மார்பில் ஒரு கணை உருவ ஓட்டி கருத்துடைத்தம்பிக்கு இன்பக்கதிர்முடி அரசு அளித்து வானரக்கோன்உடன்இருந்து வைதேகி தனைத்தேட விடுத்ததிசைக்கருமம்திருத்திக் திறல்விளங்குமாருதியும் மாயோன் தூது உரைத்தல் செய்ய