பாசுரப்படி ராமாயணம் Part - 22

பாசுரப்படி ராமாயணம்

Part - 22

சுந்தர காண்டம்

சீராரும் திறல் அனுமன் மாகடலைக் கடந்தேறி
மும்மதிள் நீள் இலங்கை புக்கு
வலிமை பொருந்திய அனுமன் கடலைத் தாவி கடுங்காவல் நிறைந்த இலங்கைக்குச் சென்று சீதையை தேடினான்.
அனுமன் கடலைத் தாவும் காட்சி வெகு அழகானக் காட்சி, இதைக் கம்பன்,

குன்றொடு குணிக்கும் கொற்றக்
குவவுத்தோள் குரக்குச் சீயம்,
சென்று உறு வேகத் திண்கால்
எறிதரத், தேவர் வைகும்
மின்தொடர் வானத்து ஆன
விமானங்கள், விசையில் தம்மில்
ஒன்றொடு ஒன்று உடையத் தாக்கி,
மாக்கடல் உற்ற மாதோ!

மலைக்குன்று போல் விளங்கும் பெரியத் தோள்களை உடைய வானர சிங்கமாகிய அனுமன் வேகமாகச்செல்வதால் உண்டான பெருங்காற்று மோத
அதனால் தேவர்களின் விமானங்கள் ஒன்றோடொன்று தாக்கிக் கடலில் விழுந்தன.

விளித்துப் பின் வேலை தாவும்
வீரன் வால் - அனுமனுடைய வால் அவன் செல்கின்ற நோக்கம் கருதி ,
களித்துப் புன் தொழில் மேல் நின்ற
அரக்கர் கண்ணுறுவர் என்ன
ஒளித்துப் பின்செல்லும் காலன்
பாசத்தை ஒத்தது அன்றே!

கொலைத்தொழிலைக் கொண்ட அரக்கர் கண்டு கொள்வார் என்று அஞ்சி காலனின் பாசக் கயிறு எப்படி கண்ணுக்கு புலப்படாதோ அது போல் ஒளித்துச் சென்றதாம்.
Part 21:
May be an image of outdoors and text that says "Jayanthi"

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காம தகனம்

பாசுரப்படி ராமாயணம் Part - 27

பாசுரப்படி ராமாயணம் Part - 23