பாசுரப்படி ராமாயணம் Part - 25
பாசுரப்படி ராமாயணம்
Part - 25
சுந்தர காண்டம்
அன்னையை சந்தித்து, சூடாமணியைப் பெற்று, தன் வருகையை இராவணனுக்கு உணர்த்த அசோகவனத்தை சுற்றியுள்ள வனம் அழித்து அரக்கர்களை விசிறி அடித்து, அக்கக்குமாரனை செஞ்சாந்து குழம்பு போல் தேய்த்து பின் இராவணன் அவைக்கு பிரமாஸ்ததிரத்தில் கட்டுண்டு சென்றான் அனுமன்.
திறல் விளங்கு மாருதியும்
இலங்கையர் கோன்மாக் கடிகாவை இறுத்துக்
காதல் மக்களும சுற்றமும் கொன்று
கடி இலங்கை மலங்க எரித்து
அரக்கர் கோன் சினம் அழித்து, மீண்டு, அன்பினால்,
அயோத்தியர் கோன் தளிர் புரையும் அடி இணை பணிய;
அங்கு அவன் வாலில் கொளுத்த வைத்த தீயை கொண்டு இலங்கையை தீக்கு இரையாக்கினான்.
மீண்டு வந்து அண்ணலை அடைந்து, தென் திசை வணங்கி,
கண்டேன் சீதையை கண்டேன் சீதையை!
கண்டனன் கற்பினுக் கணியினை கண்களால் என்றான்.
#பாசுரப்படிராமாயணம் #pasurappadi #Ramayanam #பாசுரப்படி_ராமாயணம்
கருத்துகள்
கருத்துரையிடுக