பாசுரப்படி ராமாயணம் Part - 24

பாசுரப்படி ராமாயணம்

Part - 24

சுந்தர காண்டம்

அனுமன் நீட்டிய கணையாழியைக் கண்டதும் சீதை ஆழியானைக் கண்ட இன்பம் எய்தினாள்.
கம்பன் ஒரு பெண்ணாக சீதை அடைந்த இன்பத்தை கவி நயம் சொட்ட வழங்கியுள்ளார்.
மாணிக்கத்தை இழந்த நாகம் மீண்டும் பெற்றது போலவும், இழந்த செல்வத்தை அடைந்தவர் போலவும், பிள்ளை பேறு இல்லாதவர் பிள்ளை பெற்றால் அடையும் இன்பம் பெற்றாள்.

வாங்கினள் : முலைக்குவையில்
வைத்தனள் : சிரத்தால்
தாங்கினள் : மலர்க்கண் மிசை
ஒத்தினள் : தடம்தோள்
வீங்கினள், மெலிந்தனள் :
குளிர்ந்தனள், வெதுப்போடு
ஏங்கினள் : உயிர்த்தனள் :
இது இன்னது எனல் ஆமே?

வாங்கிக் கொண்டாள். அப்படியே மார்போடு அனைத்துக் கொண்டாள், தலையின் மேல் வைத்துக் கொண்டாள், கண்களில் ஒற்றிக் கொண்டாள், தோள்கள் பூரித்தாள், உடல் குளிர்ந்தாள், வெப்படைந்தாள், ஏங்கினாள், அவள் அடைந்த நிலையை சொல்லவும் கூடுமோ என்கிறான்.
***** *****. *****. *****

மலர்க் குழளால் சீதையும்,
வில் இறுத்தான் மோதிரம் கண்டு
அனுமான் அடையாளம் ஒக்கும் என்று
உச்சிமேல் வைத்து உகக்க,

*****. *****. *****. *****
சீதை ராமனின் மோதிரம் கண்டு, அனுமன் கூறிய அடையாளங்கள் சரி என்று அந்தக் கணையாழியை தலை மேல் வைத்து மகிழ்ந்தாள்.
May be an image of outdoors and text that says "Jayanthi"

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காம தகனம்

பாசுரப்படி ராமாயணம் Part - 27

பாசுரப்படி ராமாயணம் Part - 23