பாசுரப்படி ராமாயணம் Part - 9
பாசுரப்படி ராமாயணம்
Part - 9
அயோத்தியா காண்டம்
கொங்கைவன் கூனி சொற்கொண்டுகொடிய கைகேயி வரம் வேண்டகொடியவள் வாய்க்கடியசொற்கேட்டு
ராமனுக்கு முடி சூட்டு விழா நாளை என்றறிந்த வன் மனக் கூனி சொல் கேட்டு அதனால் கொடிய வரம் இரண்டை தன் மகன் பரதன் நாடாள வேண்டும் என்றும், ராமன் 14 ஆண்டுகள் காடாள வேண்டும் என்றும் கேட்டாள்.
கம்பன்,
தோன்றிய கூனியும், துடிக்கும் நெஞ்சினாள்;ஊன்றிய வெகுளியாள்; உளைக்கும் உள்ளத்தாள்;கான்று எரி நயனத்தாள்; கதிக்கும் சொல்லினாள்;மூன்று உலகினுக்கும் ஓர் இடுக்கண் மூட்டுவாள்.
ராமனுக்கு பட்டாபிஷேகம் என்று நகர மக்கள் கொண்டாடுவதைக் கண்ட கூனி, கோபத்தால் துடிக்கின்ற நஞ்சை உடையவளாக, சினம் நிலை கொண்டவளாக, மனம் நிறைந்த வேதனை உடையவளாக, நெருப்பை கக்கும் , எரிகின்ற கண்களை உடையவளாக, மூன்று உலகங்களுக்கும் தீராத துன்பத்தை மூட்டுபவளாகத் தோன்றினாள்.
கூனி சொல்வதைக் கேட்ட கைகேயி மனம் மகிழ்ந்து அவளுக்கு அணிகளுக்கு நாயகமாக விளங்கும் ஓர் மாலையை பரிசாக கொடுத்தாள்.
சுடர்க்கு எலாம்நாயகம் அனையது ஓர்மாலை நல்கினாள்.
அதை எறிந்த கூனி கைகேயி மனதில் நஞ்சை விதைத்து அவளை தசரதனிடம் இரண்டு வரம் கேட்டுப் பெறச் சொன்னாள்.
Part 8
கருத்துகள்
கருத்துரையிடுக