Count your blessings!

 அப்பாவும் தாத்தாவும் ஆண்டுக்கு ஒருமுறை சென்னைக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள்.


திடீரென்று ஒருநாள் தாத்தா எங்கோ கிளம்பிக் கொண்டிருந்தார்.முக்கியமான ஒரு இடத்துக்கு போக வேண்டும்னு சொன்னார்.
நான் சிரித்துக் கொண்டே போயிட்டு வா தாத்தா என்றேன்.

நிற்க.

ஒரு முறை என் பெண்ணின் பள்ளி சார்பில் சென்னை, மைலாப்பூர் சித்திரக் குளத்தில் உழவாரப் பணியில் ஈடுபட்டிருந்தனர். பள்ளி மாணவியான என் பெண்ணும் பங்கெடுத்துக் கொண்டாள். அன்று என் மகளுக்கு ஒரு ஓவியப் போட்டியி அதைத் தொடர்ந்து நடனப் பயிற்சசி என்று பிஸியான schedule.

அதனால் அவளை சற்று முன்னதாக வீட்டுக்கு அழைத்துச் செல்ல ஆசிரியையிடம் அனுமதிப் பெறவேண்டும்.

பள்ளியில் யாருக்கும் என்னைத் தெரியாது. நான் அடிக்கடி பள்ளிக்கு செல்லும் ரகம் இல்லை.

பள்ளியில் எனக்கு தெரிந்தவர்கள் பள்ளியின் செக்குரிட்டியும் ஸ்போர்ட்ஸ் வாத்தியார் மட்டுமே.

அன்று ஆசிரியை சந்திக்கச் சென்ற என்னைப் பார்த்து நீங்க யாரு என்றார்.
மிகுந்த சிரமப் பட்டு தட்டித் தடுமாறி என்னை அறிமுகம் செய்துக் கொண்டிருந்தேன்.

டக் கென்று மின்னல் போல் பிரகாசித்தது அவர் முகம்.
ஓ நீங்களா?
உங்க தாத்தா தானே ஸ்கூலுக்கு வந்து ஸ்வக்ஷா எப்படி படிக்கறான்னு விசாரிச்சிட்டு போனார்?
ஆமாம்.
அன்று யாரையோ பார்க்க வேண்டும் என்று தாத்தா சொன்னது சென்றது அவர் கொள்ளுப் பேத்தி பயிலும் பள்ளிக்குத் தான்.

யாரிடமும் சொல்லாமல் தானாக சென்று குழந்தை எப்படி படிக்கிறாள், மற்றவர்களோடு எப்படி பழகுகிறாள் என்று விசாரித்து திருப்பதியான பதிலைப் பெற்றுக் கொண்டு வந்தார்.

Count your blessings!

எங்கள் பள்ளியின் வரலாற்றில் கொள்ளு தாத்தா பள்ளிக்கு வந்து விசாரித்தது அதுவே முதல் முறை என்றார்.

I always tell my daughter "count your blessings". My daughter carries this on her sleeve that she had the privilege of her great grandfather visiting her at school.

Today, my grandfather TS Kuzhaikathan aka TSK would have been 101!
He lived 98 years and a life to be celebrated. He walked straight until he breathed his last.

He was a teacher and a strict disciplinarian.
He was a sports person, a self taught, a connoisseur of Carnatic music, a great story teller, an avid reader and a mad lover of sweets.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காம தகனம்

பாசுரப்படி ராமாயணம் Part - 27

பாசுரப்படி ராமாயணம் Part - 23