தமிழில் எழுதப்பட்ட முதல் சிறுகதை எது?
தமிழில் எழுதப்பட்ட முதல் சிறுகதை 1917இல் வெளிவந்த குளத்தங்கரை அரசமரம். இதை எழுதியவர் வ வே சு ஐயர். இவர் தமிழ் சிறுகதை தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர், தன்னுடைய பன்னிரெண்டாம் வயதில் மெட்ரிக் தேர்வில் மாகாணத்தில் ஐந்தாவது இடத்தில் தேர்ச்சி பெற்றார். பதினாறாம் BA தேர்வில் மாகாணத்தில் முதல் மாணவனாக தேர்ச்சிப் பெற்றார். திருச்சியிலிருந்து சென்னை வந்து சட்டம் படித்து அதிலும் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றார்.
அவருடைய 19ஆவது வயது முதல் Pleaderஆக வக்கீல் தொழில் புரிந்து வந்தார்.
1907இல் பாரிஸ்டர் கல்வி பயில ரங்கூன் சென்றார். ஓராண்டில், சட்டப்படிப்போடு மேற்கத்திய இசை மற்றும் நடனம் பயிலும் ஆசையில், மிடுக்கான இளைஞனாக லண்டன் வந்து சேர்ந்தார். அங்கு India Houseஇல் அவருக்கு வீர் சாவர்க்கர், Dr TSS ராஜன் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. அபிநவ பாரத இயக்கத்தில் உறுப்பினர் ஆனார். அங்கு துப்பாக்கி சுடுதல் மற்றும் ராணுவ வீரருக்கான அனைத்து பயிற்சிகளையும் பெற்றார்.
அதே சமயம் ரோமன் lawவிலும் Latin மொழியிலும் முதல் இடத்தில் வெற்றி பெற்றார். அங்கிருந்து பாரதியாரின் இந்தியா பத்திரிகைக்கு கட்டுரைகள் எழுதினார். கர்சன் வைலியை, மதன் லால் திங்க்ரா கொன்றதன் விளைவாக சாவர்க்கர் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். சிறையில் இருந்த இந்திய இளைஞர்களை காணச் சென்ற ஐயர் தோற்றத்தில் முற்றிலும் மாறி நீண்ட தாடியுடன் ஒரு ரிஷி போல காட்சிளித்தார்.
பாரிஸ்டர் பட்டம் அளிப்பு விழாவில் ராஜ விசுவாசப்பிரமாணம் ஏற்க மறுத்ததால் அவர் மீது waarrant பிறப்பிக்கப் பட்டது. அங்கிருந்து Paris சென்று பல தடைகளைத் தாண்டி, மாறு வேஷம் பூண்டு கையில் கம்பராமாயண புத்தகத்துடன் பாண்டிச்சேரி வந்து சேர்ந்தார்.
அங்கு பாரதியார், அரவிந்தர், வா உ சிதம்பரம்பிள்ளை, நீலகண்ட ப்ரஹ்மச்சாரி ஆகியோருடன் தேசப் பணியை தொடர்ந்தார். இங்கு தான் வாஞ்சிநாதனுக்கு பயிற்சி அளித்தார்.
அவருக்கு பாண்டிசேரியில் நெருக்கடி வரவும் தமக்கு அதிக நாள் இல்லை. நாம் எதையாவது விட்டுச் செல்ல வேண்டும் என்று திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இன்று வரை அந்த மொழிபெயர்ப்பு அசைக்க முடியாத இடத்தைப் பெற்றுள்ளது.
ஐயர் அவர்கள் தமிழ், சமஸ்க்ரிதம், தெலுங்கு, கொங்கணி, வங்காளம் , ஆங்கிலம், உருது, ஹிந்தி, பாரசீகம், கிரேக்கம், லத்தீன், ஜேர்மன், பிரெஞ்சு, இத்தாலியன் ஆகிய மொழிகளில் புலமைப் பெற்றிருந்தார். தாகூரின் காபூலிவாலாவை தமிழில் மொழி பெயர்த்துள்ளார். கம்ப நிலையம் என்ற பதிப்பகம் நடத்திவந்தார்.
1920 இல் மதராஸ் வந்து ஒரு நாளிதழில் பணியாற்றி வந்தார். இங்கு வந்த சில நாட்களிலேயே தேச விரோத குற்றங்களுக்காக கைது செய்யப் பட்டு பெல்லாரி சிறையில் அடைக்கப் பட்டார்.
சிறையில் இருந்த ஒன்பது மாதங்களில் தமது தலை சிறந்தப் படைப்பான Kamba Ramayanam - A Study என்ற நூலை எழுதினார்.
தமிழ் சிறுவர்களுக்கு விவசாயம், நெசவு, கட்டுமானப் பணி, தோட்டக்கலை, வாள் மற்றும் தற்பாதுகாப்புக் கலை கற்றுக் கொடுத்து வீரமிக்க தமிழ் சமுதாயம் உருவாக்க, சேரன்மாதேவியில் தமிழ் குருகுலம் துவங்கினார்.
தமிழ் குருகுல மாணவர்களோடு கல்யாண தீர்த்தத்துக்கு சுற்றுலா சென்ற இடத்தில் கால் இடறி விழுந்த தன் மகள் சுபத்ராவைக் காப்பாற்ற நதியில் குதித்த ஐயர் அவர்கள் தாமிரபரணியோடு பொதிகை சாரலில் கலந்து 1925ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் தேதி, தன்னுடைய 44 வது வயதில் உயிரை துறந்தார்.
திருமதி தங்கம்மாள் பாரதி அவர்கள் வார்த்தையில் சொல்லவேண்டுமானால் பொதிகை துறைவன் அகத்தியன் தமிழ் பேச, தமிழ் தவம் செய்ய, தனக்கு துணையாக தமிழ் தாயின் தவப் புதலவனை அழைத்துக் கொண்டான் என்றே தோன்றுகிறது.


கருத்துகள்
கருத்துரையிடுக