தனியொருவனுக் குணவில்லை யெனில்
இன்று சுவாமி ஓம்காரானந்தாவின் பிறந்த தினம்.
திருவல்லிக்கேணியில் பாரதி வசித்து வந்தபோது ஒரு இரவில் யாரோ ஒருவர் வீட்டின் கதவை தட்டினார்.
தேச விடுதலைப் பாடலைப் பாடிக்கொண்டே பாரதி, கதவை திறந்தால் மெலிந்த தேகத்துடன், நோயுற்ற தோற்றத்துடன் ஒரு பிச்சைக் காரர்.
வாசலில் நின்றவரோ,
என்ன சுவாமிகளே பாட்டு பாடிக் கொண்டு காலம் கழிக்க முடியுமா?
தேச விடுதலைக்கு போராடிய எனக்கு சாப்பாட்டுக்கு வழி இல்லை. பிச்சை எடுக்கலாமா என்று இருக்கேன்.
பாரதி! எனக்கு பசிக்கிறது. நான் சாப்பிட்டு நான்கு நாட்கள் ஆகிவிட்டது என்றார்.
யார் நீ என்ற பாரதிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
என்னை தெரியலையா?
நான் தான் ப்ரஹ்மச்சாரி, நீலகண்டன் என்றார்.
பாரதியாருக்கு ரத்தம் கொதித்தது. அவருக்கு சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்து அன்று அவர் பாடியது
தனியொருவனுக் குணவில்லை யெனில்
ஜெகத்தினை அழித்திடுவோம்.
ஆம் 20,000 வீரர்களுக்கு பயிற்ச்சி கொடுத்து, ரகசியமாக ஆயுதங்கள் வாங்கி, வீர் சாவர்க்கருடன் சேர்ந்து விடுதலை திட்டங்கள் தீட்டி, பாரத மாதா இயக்கத்தை- அபினவ பாரத இயக்கத்தைத் துவங்கி, சூரியோதயம் பத்திரிகை நடத்தி, மாப்ள போராட்டத்தில் கலந்து கொண்டு, விடுதலை போராட்டத்தில் தன்னை ஈடு படுத்திக் கொண்டவர்.
கலெக்டர் ஆஷ் கொலை வழக்கில் conspiracy குற்றத்திற்காக 7 ஆண்டுகள் rigorous imprisonment தண்டனை அவருடைய 21 வயதில் பெற்றவர்.
அப்படி வெளியில் வந்தவர் தான் பிச்சை எடுக்கலாம் என்று நினைக்கிறேன் என்றார்.
இன்று போல் ஒரு நாட்டின் பிரதமரை கொன்று, குற்றம் சாட்டப்பட்டு, பெயிலில் வெளியில் வந்து தெனாவெட்டோடு அலையும் கூட்டத்துக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் இது புரியாது.
மீண்டும் நீலகண்ட ப்ரஹ்மச்சாரி விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டு 10 ஆண்டுகள் சிறையில் அடைக்கப் பட்டார்.
அதன் பின்னர் துறவு பூண்டு, சுவாமி ஓம்காரானந்தாவாக, பெங்களூரை அடுத்த நந்தி ஹில்ஸ் பகுதியில் ஆசிரமம் அமைத்து 1978 ஆம் ஆண்டு காலமானார்.
அவருக்கு மாநில அரசும். மத்திய அரசும் எந்த மரியாதையும், அங்கீகாரமும் அளிக்கவில்லை.
தலை வணங்குவோம் இந்தியத் தாயின் தலை மகன் திருவடிகளில்.


செங்கல் செங்கலாக வைத்துச் சுதந்திர வேட்கையைக் கட்டிய போதே சுய வாழ்க்கை செங்கல் செங்கலாக உருவப் பட்டது. தண்ணீர் விட்டா வளர்த்தோம்!
பதிலளிநீக்குVery true
நீக்குஜெய் ஹிந்த் 🙏
பதிலளிநீக்குபாரத் மாதா கி ஜெய் 🙏