திலகர் திடல்
திலகர் திடல் சென்னையில் எங்கிருக்கிறது தெரியுமா?
யார் இந்த பெயரை சூட்டினார்?
இது சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய சந்திப்புகளை கண்ட இடம்.
1908இல் திலகரால் ஈர்க்கப்பட்டு, ஜார்ஜ் டவுணில் தொடங்கி கடற்கரையை அடைந்து மிகப்பெரிய சுதந்திர எழுச்சியுடன் பாரதியார் உரையாற்றிய இடம்.
பிரிட்டிஷ் போலீஸ் 5000 உறுப்பினர்கள் பங்கு கொண்டனர் என்று பதிவு செய்துள்ளனர்.
வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பாடலை பாரதியார் பாடிய இடம்.
பாரதியார், வ உ சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணிய சிவம், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், மகாத்மா காந்தி, ராஜாஜி ஆகியோர் உரையாற்றிய இடம்.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க இடத்துக்கு திலகர் திடல் என்று பெயர் சூட்டியவர் 1908இல் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக சதி செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்பட்டு அதனால் தொழுநோய் வந்து, சிறையிலிருந்து வெளியில் துறத்தப் பட்ட திரு சுப்பிரமணிய சிவம்.
பாரத மாதாவை ஆராதித்து அவளுக்கு கோயில் எழுப்ப எண்ணிய திரு சுப்பிரமணிய சிவம் அவர்கள் தான் சென்னை கடற்கரையின் இந்த பகுதிக்கு திலகர் திடல் என்று பெயர் சூட்டியவர்.
நாடு மறந்த சுதந்திர போராட்ட வீரர், தமிழ் அறிஞர், சமூக சிந்தனையாளர், அருமையான நூல்களை படைத்தவர், திரு சுப்பிரமணிய சிவம் அவர்களின் 96வது நினைவு நாள் இன்று.
சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று முழங்கிய பால கங்காதர திலகர் பிறந்த நாள் இன்று.
Pic Courtesy: Sampathkumar Srinivasan
samspeak.in
கருத்துகள்
கருத்துரையிடுக