கடவுளைக் கண்டேன்
நாம் ஒரு முக்கிய பிரமுகரையோ, பிரபலத்தையோ பார்த்தால் அவர்களுடன் photo எடுத்துக் கொள்வோம். Selfie எடுத்துக் கொள்வோம். அந்த போட்டோவை Frame செய்து போட்டுக் கொள்வோம்.
நான் பார்த்தது கடவுளை. என்ன செய்யலாம்?
நிச்சயமாக Frame செய்து மாட்ட வேண்டும்.
எப்படி உறுதியாக தெரியும் அது கடவுள் தான் என்று?
எனக்குத் தெரியும் கடவுள் தான் வந்தார் என்று.
கடவுள் எப்படி இருப்பார்? சூரியக் கோடி பிரகாசத்துடன், பளீரென்று. அப்படித் தான் தோன்றினார்.
நீ அவரிடம் கேட்டாயா?
இல்லை. கேட்டால் மறைந்து விடுவார்.
வினவக் கண் விழித்தேன் - சகியே
மேனி மறைந்து விட்டான்
என்று குரு நாதர் சொல்லியது நினைவில் இருந்ததால் நான் எதுவும் கேட்கவில்லை.
நான் வணங்கும் அந்த தெய்வம் ஒளிமயமாக தோன்றினார். நெருப்பென்ன நின்ற நெடுமாலாக தோன்றினார். ஆனால் என்ன ஓர வஞ்சனை ஒரு கண்ணில் மற்றும் தான் தோன்றினார்.
திடீரென ஒரு நாள் என் கண்ணில் பளீரென்ன ஒரு மின்னல் ஒளி தோன்றியது. இதற்கு Flash என்று பெயர். இப்படி தோன்றினால் அது கண் மருத்துவத்தில் ஒரு Emergency ஆக கருதப்படுகிறது.
மருத்துவ மனைக்கு சென்றால் அவசர சிகிச்சை பிரிவில் 12 மணி நேரத்துக்குள் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றார்கள்.
Glaucoma பாதிப்பு இருப்பதால் இரெண்டு கண்களுக்கும் லேசர் surgery செய்யப் பட்டது. பின்னர் அதனை தொடர்ந்து சிகிச்சைகள். இப்போது கண்கள் பாதுகாப்பாக உள்ளது.
உச்சி குளிந்ததடி - சகியே
உடம்பு நேராச்சு.
மச்சிலும் வீடுமெல்லாம் - முன்னைப் போல்
மனத்துக் கொத்ததடி
இச்சை பிறந்ததடி - எதிலும்
இன்பம் விளைந்ததடி
அச்ச மொழிந்ததடி - சகியே
அழகு வந்ததடி.
ரொம்ப அழகா க இருக்கிறது.
பதிலளிநீக்குபிரமாதம் 🙏 🎉
பதிலளிநீக்கு