பாசுரப்படி ராமாயணம் Part - 17
பாசுரப்படி ராமாயணம்
Part - 17
ஆரண்ய காண்டம்
காது மூக்கு அறுபட்ட சூர்ப்பணகை நேராக ஓடிச்சென்று கரனிடம் விழுந்து, புரண்டு அரற்றினாள்.
இருந்த மாக் கரன் தாள் இணையின் மிசைச்சொரிந்த சோரியள் கூந்தலள் தூம்பு எனத்தெரிந்த மூக்கினள் வாயினள் செக்கர் மேல்விரிந்த மேகம் என விழுந்தாள்; அரோ.
அவையில் வீற்றிருந்து காரனின் இருக்கை முன்பு சிவந்த வானம் மேல் படர்ந்த மேகம் போல் விரிந்த கூந்தலும், மதகு போன்ற மூக்கு துவாரனங்களையும் , அகன்ற வாயையும் உடைய சூர்ப்பணகை விழுந்தாள்.
காரனும் தன படையோடு வந்து ராமனோடு போர் செய்தான். முதலில் வந்த பதினால்வர் மாண்டுபோக கரண் பெரும் படை திரட்டிக் கொண்டு வந்தான்.
சூலம் அற்றன; அற்றன சுடர் மழு;
தொகை வாள்
மூலம் அற்றன; அற்றன முரண்
தண்டு; பிண்டி-
பாலம் அற்றன; அற்றன பகழி;
வெம் பகு வாய்
வேலும் அற்றன; அற்றன
வில்லொடு பல்லம்.
வந்தது தான் தாமதம் சூலம் ஒடிந்தது, மழுவும் வாழும் மழுங்கியது, தண்டாயுதம் பிடி அற்றது, பிண்டி பாலம் என்னும் கருவி உடைந்தது, அம்புகள் அற்றது.
தொடர்ந்து ஒரு முகூர்த்த காலம் போர் நடந்து அதில் கரண் படையோடு மாண்டான்.
அப்போது வானிலிருந்து தேவர்கள் ஆர்ப்பரித்தனர். முனிவர்கள் வாழ்த்தினர்.
விண்ணின் நீங்கிய வெய்யவர் மேனியில்
புண்ணின் நீரும் பொடிகளும் போய் உக,
அண்ணல் வீரனைத் தம்பியும் அன்னமும்
கண்ணின் நீரினில் பாதம் கழுவினார்.
ராமனின் மேனியில் பதிந்திருந்த, போரில் மாண்டு வீரசுவர்க்கம் அடைந்தவர் குருதியையும், போரில் எழும்பிய புழுதியையும் சீதையும் இலக்குமணனும் தங்கள் கண்ணீரால் கழுவினார்.
ஆக கரனும் மாண்டு போக,
கரனொடு தூடணன் தன் உயிரை வாங்க
அவள்கதறித் தலையில் அங்கை வைத்து
மலை இலங்கை ஓடிப்புக,
கதறி அழுதபடியே தலையில் கை வைத்து அழுதபடியே இலங்கைக்கு போனாள்.

கருத்துகள்
கருத்துரையிடுக