பாசுரப்படி ராமாயணம் Part - 18

பாசுரப்படி ராமாயணம்

Part - 18

ஆரண்ய காண்டம்

சூர்ப்பணகை சொன்ன வார்த்தையில் மயங்கிய அரக்கன் ராவணன் மாமன் மாரீசனோடு திட்டம் தீட்டினான்.

கொடுமையில் கடுவீசை அரக்கன்
அலைமலி வேற் கண்ணாளை அகல்விப்பான்
ஓர் உருவு ஆயமானை அமைத்து சிற்றெயிற்று
முற்றல் மூங்கில் மூன்று தண்டத்தனாய் வஞ்சித்து
இலைக் குரம்பையில் தனி இருப்பில்
கனிவாய்த் திருவினைப் பிரித்து
நீள்கடல் சூழ் இலங்கையில்
அரக்கர் குடிக்கு நஞ்சாகக் கொடு போந்து
வம்புலாம் கடிகாவில் சிறையா வைக்க

கொடுமையில் கடுவீசை அரக்கன் - கொடுமையான கடும் வேகத்தை உடைய அரக்கன்,
அலைமலி வேற் கண்ணாளை அகல்விப்பான் - துன்பத்தை ஏற்படுத்தும் வேல் போன்ற கண்களை உடையவளான சீதையை பிரிப்பதற்காக,
ஒரு உருவத்தை ஏற்படுத்தி மாரீசனை மாயமானாக உருவெடுக்க வைத்து,
சிறிய கண்ணிகளை கொண்ட வலிமையான மூங்கில் கோல் மூன்றினை கொண்ட சந்நியாசி வேடம் தரித்து, வஞ்சித்து,
இலைககளால் ஆன பர்ணசாலையில் தனியாக இருந்த திருவாகிய பிராட்டியை பிரித்து இலங்கையில் கடுங்காவலில், சிறையில் வைத்தான்.
May be an image of text that says "Jayanthi"

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காம தகனம்

பாசுரப்படி ராமாயணம் Part - 27

பாசுரப்படி ராமாயணம் Part - 23