பாசுரப்படி ராமாயணம் Part - 20

பாசுரப்படி ராமாயணம்

Part - 20

ஆரண்ய காண்டம்

சீதையை தேடி இரவும் பகலும் கான் வழியே நடந்து எதிர்வந்த கவந்தனை மடித்து மேலும் கான் வழியே நடந்த போது எதிர் பட்டாள் சவரி.

கங்குலும் பகலும் கண்துயில் இன்றிக்
கானகப்படி உலாவி உலாவிக்
கணை ஒன்றினால் கவந்தனை மடித்துச்
சவரி தந்த கனி உவந்து,

இங்கு ராமன் வருவான் என்று நெடுங்காலமாக மதங்காஸ்ரமத்தில் காத்திருந்தாள் சபரி.

அளவு இல் காலம்
தன்னையே நினைந்து நோற்கும் சவரியைத்
தலைப்பட்டு,

எவ்வளவு காலம் என்று சொல்ல முடியாத அளவு நீண்ட காலம் ராமனையே நினைத்து தவம் செய்து கொண்டிருந்த சவரியைக் கண்டான் .

மாண்டது என் மாயப் பாசம்;
வந்தது, வரம்பு இல் காலம்
பூண்ட மா தவத்தின் செல்வம்;
போயது பிறவி' என்பாள்
வேண்டிய கொணர்ந்து நல்க,
விருந்துசெய்து இருந்த வேலை,
போனது என் பிறவி சுழற்சி, போனது என் பற்று. என்றாள்  

நீண்ட காலம் தவம் இருந்த சவரி. இனிமேல் பிறப்பு பிழிந்து என்று சொன்னபடியே அவர்கள் உண்ண கனிகளை கொடுத்தாள்.

அருந் தவத்து அரசிதன்னை
அன்புற நோக்கி, 'எங்கள்
வருந்துறு துயரம் தீர்த்தாய்;
அம்மனை! வாழி' என்றார்.

தவத்துறைக்கு அரசியாகிய சவாரியைப் பார்த்து தாயே, நாங்கள் இவ்வளவு தூரம் நடந்து வந்ததால் ஏற்பட்ட களைப்பை நீக்கினாய், நீ வாழ்க என்றான்.
அத் துளக்கு இல் குன்றம் - குற்றமில்லாத ருசியமுகம் என்ற மலையை சென்றடையும் வழியை சொன்னாள்.

பின், அவள் உழந்து பெற்ற
யோகத்தின் பெற்றியாலே
தன் உடல் துறந்து, தான் அத்
தனிமையின் இனிது சார்ந்தாள்;
அன்னது கண்ட வீரர் அதிசயம்
அளவின்று எய்தி,
பொன் அடிக் கழல்கள் ஆர்ப்ப,
புகன்ற மா நெறியில் போனார்.

அதன் பின் அவள் பெற்ற தவத்தின் பயனால் உடலைத் துறந்து, காயத்தை கரைத்து காற்றோடு கலந்தாள். அதனைக் கண்டா ராம லக்ஷ்மணர்கள் அளவற்ற அதிசயம் என்று மகிழ்ந்தனர்.
ஆரண்ய காண்டம் முற்றிற்று.
May be an image of text that says "Jayanthi"

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காம தகனம்

பாசுரப்படி ராமாயணம் Part - 27

பாசுரப்படி ராமாயணம் Part - 23